அடுத்த 2 மணி நேரம் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஜூன் 1ம் தேதி முதல் திருத்தப்பட்ட அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயங்கும்குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்: குறைகள் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார்
/

பருப்பு வகைகளும் அதன் சத்துகளும்...!

துவரம் பருப்பில் நல்ல அளவில் புரோட்டீன், ஃபோலிக் ஆசிட் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன.

News image
Updated On :10 ஜூன் 2020, 9:38 pm IST

துவரம்பருப்பு:


துவரம் பருப்பில் நல்ல அளவில் புரோட்டீன், ஃபோலிக் ஆசிட் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. இதில் காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட் மற்றும் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், குடலியக்கம் சீராக வைக்கும், மலச்சிக்கல் பிரச்னை ஏற்படுவதை தடுக்கும்.

பச்சைபயறு:

பாசிப்பருப்பில் வைட்டமின் ஏ, பி, சி, ஈ மற்றும் கனிமச் சத்துக்களான கால்சியம், இரும்புச்சத்து மற்றும் பொட்டாசியம் அதிகம் உள்ளது. மேலும் உடல் எடையை குறைப்பதற்கு உதவியாகவும் இருக்கும். அதுமட்டுமல்லாமல், அதிகப்படியான புரோட்டின் மற்றும் நார்ச்சத்தால், இது உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவை குறைக்கும்.

பாசிப்பருப்பு:

இந்த பயறு மஞ்சள் நிறத்தில் இருக்கும். இதிலும் புரோட்டீன், கால்சியம், பொட்டாசியம், பி காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. எனவே இதனை சாப்பிட்டால், உடலில் உணவுகள் எளிதல் செரிமானமடைவதோடு, உடல் எடை மற்றும் கொலஸ்ட்ரால் குறையவும் உதவியாக இருக்கும்.

கொண்டைக்கடலை:

கொண்டைக்கடலையில் ஃபோலிக் ஆசிட், மாங்கனீசு, இரும்புச்சத்து, காப்பர், மக்னீசியம் போன்றவை அதிக அளவில் இருக்கிறது. ஆகவே கொலஸ்ட்ரால் குறைவதோடு, இதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பும் குறையும். கொண்டைக்கடலை சுண்டலில், புரோட்டீன், காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரோட், வைட்டமின்கள், இரும்புச்சத்து, கால்சியம்,

ஃபோலேட் மற்றும் நார்ச்சத்து அதிகம் நிறைந்திருப்பதால், அது கருப்பைக் குழாயில் பிரச்னை ஏற்படுவதையும், ரத்த சோகை பிரச்னையையும் தடுக்கும். இது உடல் சக்தியையும் அதிகரிக்கும்.

கடலைப்பருப்பு:

கடலைப்பருப்பில் ஃபோலிக் ஆசிட், மாங்கனீசு, இரும்புச்சத்து, காப்பர் மற்றும் மக்னீசியம் போன்றவை நிறைந்துள்ளது. அதிகமாக புரோட்டீன் நிறைந்திருப்பதால், இதனை அதிகம் சாப்பிட உடல் வலுவோடு ஆரோக்கியமாக இருக்கும். குறிப்பாக இதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், நீரிழிவு மற்றும் கரோனரி இதய நோய் போன்றவை ஏற்படுவது குறையும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.