நகர வாழ்க்கையில் பெரும்பாலும் வீட்டுக்குள்ளேயே வாஷிங் மிஷினில் துவைத்து, வீட்டுக்குள்ளேயே கயிறுகட்டி அதை காய போடுவதற்குதான் சிலருக்கு இடம் இருக்கும்.
இதில் அப்படி என்ன ஆபத்து என்கிறீர்களா?
பாக்டீரியா, பூஞ்சான் என நம் கண்ணுக்குத்தெரியாமல் இருக்கும் நுண்ணுயிரிகளுக்கு மிகவும் பிடித்தது ஈரப்பதம்! அதற்கு நாம் வீட்டிலேயே துணியை காய போடுவதன் மூலம் அவைகளை வரவேற்கிறோம். இந்த நுண்ணுயிரிகள் மனிதனின் நோய் எதிர்ப்பு மண்டலத்தையே பலவீனப்படுத்திவிடும்.
அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில், ஈரப்பதமுள்ள காற்றில் இருக்கும் நுண்ணுயிரிகள் காற்றோட்டம் குறைவாக இருக்கும் நம் வீடுகளுக்குள் காயவைக்கும் துணிகளோடு வந்து ஒட்டிக் கொள்கின்றன. இது இயல்பாக நடக்கிறது.
இவை அரைகுறையாக காய்ந்த துணிகளில் வாடையை உருவாக்குகின்றன. மேலும் அந்த ஆடையை அதன் உரிமையாளர் அணியும்போது, அது அவருக்கு மூச்சுக்குழல் வழியாக நுழைந்து விடும்.
இவை நோய் எதிர்ப்பு சக்தியை வீழ்த்தி ஆஸ்துமா உருவாகவும் வழிவகுக்கும். இந்த நுண்ணுயிரிகளின் வளர்ச்சி வீட்டில் காயப்போடும் துணியில் 30 சதவிகிதம் அதிகமாம். இதனால் நன்கு வெயில் இருக்கும், வெளிப்பகுதியில்தான் துணியை உலர்த்த வேண்டும் என்கிறது இந்த ஆய்வு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








