மின்னல்கள்!
"காதல்' படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை சந்தியா. அதைத் தொடர்ந்து தமிழில் பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்து தனக்கென ஓர் அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர்.


சின்னத்திரையில் சந்தியா!
"காதல்' படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை சந்தியா. அதைத் தொடர்ந்து தமிழில் பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்து தனக்கென ஓர் அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர்.
2015 -இல் இவருக்கு திருமணம் நடைபெற்றது. அதன்பிறகு திரைத்துறையில் இருந்து விலகியிருந்தார். இந்நிலையில் சன் தொலைக்காட்சியில் பூர்ணிமா பாக்யராஜ், சஞ்சீவ், லீஷா, சாம்பவி உள்ளிட்டோர் நடிப்பில் ஒளிப்பரப்பாகி வரும் "கண்மணி' தொடரின் மூலம் மீண்டும் நடிக்க வந்துள்ளார். சமீபத்தில் இவர் கௌரவ தோற்றத்தில் நடித்துள்ள காட்சிகள் இத்தொடரில் ஒளிப்பரப்பாகியது. இதன் மூலம் சந்தியா சின்னத்திரை உலகில் வலம் வருவார் எனக் கூறப்படுகிறது.
முல்லைக்கு திருமணம்!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் "பாண்டியன் ஸ்டோர்ஸ்' தொடரில் முல்லையாக நடித்து வருபவர் சித்ரா.
தொகுப்பாளினியும் நடிகையுமான சித்ராவிற்கு இந்த தொடரின் மூலம் ஏராளமான ரசிகர்களும் உருவாகியுள்ளனர்.தற்போது சித்ராவுக்கென்று தனி ஆர்மி எல்லாம் கூட தொடங்கிவிட்டது. இந்த நிலையில் நடிகை சித்ராவிற்கு திடீரென்று திருமண நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் 24- ஆம் தேதி சென்னையில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. சித்ரா திருமணம் செய்து கொள்ள இருக்கும் மாப்பிள்ளை ஹேமந்த் ரவி ஒரு தொழிலதிபர்.
இதுகுறித்து சித்ரா கூறுகையில், ""ரொம்ப நாள்களாகவே வீட்டில் திருமணத்திற்கு மாப்பிள்ளை பார்த்து வந்தனர். அது இப்போதுதான் கைகூடி வந்துள்ளது. திருமணம் வாழ்க்கையின் முக்கியமான தருணம் என்பதால் மகிழ்ச்சியாக இருக்கிறது. அதே சமயம் நிச்சயதார்த்தம் முடிந்ததுமே, சிலர் பரபரப்புக்காக என்னுடைய வருங்கால கணவருக்கு சென்னை திருவேற்காடு அருகில் இருக்கும் பிரம்மாண்ட கல்யாண மண்டபம் சொந்தமானது என்ற பொய்யான தகவலை பரப்பி வருகின்றனர். அது உண்மையல்ல. தயவு செய்து இனிமேல் இதுபோன்ற பொய்யான தகவலை பரப்பாதீர்கள்'' என்று கூறியிருக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...