மருத்துவ குணம் நிறைந்த கருப்பு திராட்சை விதை!

கருப்பு திராட்சை என்றவுடன் அனைவருக்கும் நினைவுக்கு வருவது புளிப்பு சுவை தான். திராட்சைப் பழங்களை விட அதன் விதையில் ஏராளமான மருத்துவ நன்மைகள் நிறைந்துள்ளன.
மருத்துவ குணம் நிறைந்த கருப்பு திராட்சை விதை!
Updated on
1 min read

கருப்பு திராட்சை என்றவுடன் அனைவருக்கும் நினைவுக்கு வருவது புளிப்பு சுவை தான். திராட்சைப் பழங்களை விட அதன் விதையில் ஏராளமான மருத்துவ நன்மைகள் நிறைந்துள்ளன. கருப்பு திராட்சைப் பழத்தை விட, அதன் விதையில் புரோ-ஆன்தோசயனிடின் எனும் சத்து அதிகமாக நிறைந்துள்ளது.

ரத்தக்குழாய்களில் ஏற்படும் அடைப்பு, ரத்தக்குழாய்களில் ஏற்படும் வீக்கம், ரத்தக் கொதிப்பு போன்றப் பிரச்னைகளை குணமாக்க திராட்சைப் பழத்தின் விதை அதிகமாக பயன்படுகிறது.

கருப்பு திராட்சையின் விதை மூல நோயினால் ஏற்படும் ரத்தப்போக்கை கட்டுப்படுத்த பெரிதும் உதவுகிறது.

ரத்தக்குழாய்களில் உள்ள கொழுப்பைக் கரைத்து, சர்க்கரை நோய் மற்றும் கால்கள் மரத்துப்போதல் போன்ற பிரச்னையை குணமாக்க கருப்பு திராட்சையின் விதை மிகவும் உதவுகிறது.

சிறுநீரகச் செயல்பாட்டின் குறைகளை சரிசெய்யப் பயன்படுகிறது. மேலும், மாலைக்கண் நோய் மற்றும் கண்புரை போன்ற கண் தொடர்பான பிரச்னைகள் வராமல் இருக்க கருப்பு திராட்சையின் விதை பயன்படுகிறது.

பெண்களின் மார்பகப் புற்றுநோய், கருப்பை கோளாறுகள் மற்றும் ஆண்களுக்கு ஏற்படும் புரோஸ்டேட் புற்றுநோய் போன்றப் பிரச்னைகள் வராமல் இருக்கவும் கருப்பு திராட்சையின் விதை உதவுகிறது.

நம் உடலிலுள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்றி புத்துணர்ச்சி தரக்கூடிய ஆன்டி ஆக்சிடன்ட் இதில் அதிகம் நிறைந்துள்ளது. மேலும், புற்றுநோய் செல்களை அழித்து, புதிய ஆரோக்கியமான செல்கள் அதிக அளவில் உற்பத்தி செய்ய உதவுகிறது. எனவே திராட்சைப் பழத்துடன் விதைகளையும் சேர்த்து உண்பது நல்ல பலனைத் தரும். 

உடல் வளர்ச்சியில் குறைபாடு உள்ளவர்கள், உடல் பலகீனம் உள்ளவர்கள், தோல் வியாதி, மூட்டு வலி, மூட்டு வீக்கம் ஆகிய பிரச்னை உள்ளவர்கள் இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் விரைவில் நிவாரணம் கிடைக்கும். நினைவாற்றலை பெருக்கவும் இது பயன்படுகிறது.

எனவே, இவ்வளவு மகத்துவம் நிறைந்த திராட்சை விதைகளை, இவ்வளவு நாளாக தூக்கி எறிந்து விட்டோமே என வருந்தாமல், இனிமேலாவது திராட்சையுடன் விதைகளையும் சாப்பிடுங்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com