வயதாகி வீட்டில் ஓய்வுடன் இருக்கும்போது சிலருக்கு தங்கள் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் நினைவுக்கு வருவதுண்டு. ஆனால், அந்த நினைவுகளையோ, அனுபவங்களையோ மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பிருக்காது. ஒரு சில ஆண்கள் தங்கள் திறமையால் புத்தகமாக எழுதுவதுண்டு. அவர்களைப் போலவே 80 வயதில் தங்கள் நினைவுகளை புத்தகமாக எழுதிய இரு பெண்களை சந்திப்போம்:
82 வயதாகும் தன்னுடைய அம்மா சுக்லாலாலுக்கு பிறந்தநாள் வாழ்த்துக் தெரிவிப்பதற்காக அவரது மகள் போன் செய்தபோது, அவர் போனை எடுக்காதது ஆச்சரியமாக இருந்தது. அதுமட்டுமல்ல சில நாட்களாகவே தன்னுடைய அம்மா காலையில் தனக்கு போன் செய்து காலை வணக்கம் தெரிவிக்கும் போது தான் சுக்லாவின் மகள் படுக்கையிலிருந்து எழுவது வழக்கம். சில நாட்களாகவே சுக்லாலால் காலையில் போன் செய்வதும் இல்லை.
நேரில் சென்று விசாரித்தபோதுதான் சுக்லா காலையில் எழுந்து கவிதைகள் எழுதுவது தெரிந்ததாம். என்ன இது புது பழக்கம் என்று கேட்டபோது, தோட்டத்தில் மரங்களிலிருந்து உதிர்ந்து விழும் இலைகளையும், சிதிலமடைந்து வரும் தன்னுடைய வீட்டையும் பார்க்கும்போது மனதில் தோன்றிய பழைய நினைவுகளே தன்னை கவிதை எழுதத் தூண்டியதாக சுக்லாலால் கூறியுள்ளார்.
ஒரே மாதத்தில் 29 கவிதைகளை எழுதியவர், அடுத்து மூன்று மாதங்களுக்குள் ஒரு நாவலையும் எழுதி முடித்துள்ளார். அதுதான் 82-வயதில் அவர் எழுதிய முதல் நாவலாகும். இந்தியா- பாகிஸ்தான் பிரிவினையின்போது நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து ஒரு காதல் நவீனத்தை எழுதிய சுக்லாலால், அடுத்து கொல்கத்தாவில் இருந்தபோது இளமை காலத்தில் கேட்டறிந்த ஒரு சரித்திர காதல் கதையை மையமாக வைத்து "ப்ளோட்டிங் லாக்ஸ்' என்ற தலைப்பில் சரித்திர நாவலொன்றை எழுதி முடித்துள்ளார்.
தற்போது முன்றாவதாக "வெர்டிகல் அவலாஞ்சி' என்ற நாவலை எழுதிக் கொண்டிருக்கிறார். இந்த நாவல்களின் கரு அனைத்துமே இவரது கடந்த காலத்தில் கண்ட, கேட்ட சம்பவங்களின் அடிப்படையாகும்.
இந்த வயதான காலத்தில் நாவல் எழுத வேண்டிய அவசியமென்ன?
""முன்பு எனக்கு ஓய்வில்லாமல் ஏதாவது வேலைகள் இருந்து கொண்டே இருந்தது. இந்த சந்தர்ப்பத்தைவிட்டால் எப்போது எழுதுவது'' என்று கேட்கிறார் சுக்லா.
வயதான காலத்தில் தங்களுடைய அனுபவங்களை வைத்து முதன் முதலாக நாவல் எழுதிய இன்னொருவர், புணே நகரத்தில் வசிக்கும் ஜார்னா பானர்ஜி. "பெர்ச்ட் ஆன் தி பெரிபெரி' என்ற தலைப்பில் இவர் முதன்முதலாக நாவல் எழுத எடுத்துக் கொண்ட காலம் பத்து ஆண்டுகள். வயதான விதவை ஒருத்தி தன் குழந்தைகளுடன் புலம் பெயர்ந்து வந்து வாழும்போது, தன்னுடைய அடையாளத்தை இழக்க விரும்பாமல் எப்படி வாழ்ந்தாள் என்பதுதான் இந்த நாவலின் கரு. இந்த நாவலை எழுதத் தொடங்கியபோது, இவரது கணவர் பெர்கின்சன் வியாதியால் பாதிக்கப்பட்டிருந்ததால் முழுநேரமும் அவரையும் கவனித்துக் கொண்டு கிடைத்த நேரத்தில் எழுத வேண்டியவைகளை நினைவுப்படுத்தி 65-ஆவது வயதில் எழுத ஆரம்பித்தவர் பத்தாண்டுகள் கழித்தே நிறைவு செய்துள்ளார். தற்போது இரண்டாவது நாவலை எழுதத் தொடங்கியுள்ள இவருக்கு 82 வயதாகிறது.
இரு பெண் எழுத்தாளர்களுக்குப் பொருளாதார ரீதியில் எவ்வித பிரச்னையும் இல்லை. பின் எதற்காக வயதான காலத்தில் பழைய நினைவுகளை நினைவுப்படுத்தி எழுத வேண்டும்.
"எங்கள் அனுபவங்களை நாவலாக எழுதுவதன்மூலம் அந்த காலகட்டத்தை இன்றைய தலைமுறையினர் படித்து தெரிந்து கொள்ள வேண்டும். பிரிவினைக்கு முன் என்னுடைய குழந்தைகள் வாழ்ந்த அமைதியான வாழ்க்கை, சமூக ஒற்றுமை எல்லாம் எங்கே போனது? இந்தியாவின் மாற்றத்திற்கு காரணம் என்ன? முன்பிருந்த விழிப்புணர்வு இப்போது ஏன் இல்லை? என்பதை வெளிப்படுத்தவே எழுதுகிறேன்' என்கிறார் சுக்லாலால்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கர - டிக்கெட் முன்பதிவு மந்தம்!
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30

துருவ நட்சத்திரம் வெளியீட்டுத் தேதி இதுவா?

கேரளத்தில் கனமழை! 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்!
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


