பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

சமையல்... சமையல்!

கம்பு,  வரகு,  குதிரைவாலி மற்றும் இட்லி அரிசியை  வெந்தயத்துடன்  ஒன்றாக  கழுவி,  3 மணி நேரம் ஊற வக்கவும்.  

News image
Updated On :8 செப்டம்பர் 2020, 6:30 pm

DIN


சிவப்பரிசி புட்டு

தேவையானவை:
சிவப்பரிசி புட்டு மாவு - 100 கிராம்
நெய் - 100 மி.கி.
சர்க்கரை - 150 கிராம்
தேங்காய்த் துருவல் - 1 கிண்ணம்
வறுத்த முந்திரிபருப்பு - 10
ஏலக்காய்த் தூள் - சிறிதளவு

Story image

செய்முறை: புட்டு மாவுடன் சிறிதளவு சூடான தண்ணீர் தெளித்து நன்றாக பிசறவும். பின்னர் அதைப் புட்டுக் குழலில் அடைத்து, ஆவியில் வேக வைத்து எடுத்து உதிர்த்துக் கொள்ளவும். பின்னர், இதனுடன் தேங்காய்த்துருவல், ஏலக்காய்த் தூள், சர்க்கரை வறுத்து உடைத்த முந்திரிப் பருப்பை சேர்த்து நன்றாக கலந்து பரிமாறவும்.

சிறுதானிய இட்லி

தேவையானவை:
கம்பு, வரகு, குதிரை வாலி,
இட்லி அரிசி, உளுந்து - தலா 1 கிண்ணம்
வெந்தயம் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப

Story image


செய்முறை: கம்பு, வரகு, குதிரைவாலி மற்றும் இட்லி அரிசியை வெந்தயத்துடன் ஒன்றாக கழுவி, 3 மணி நேரம் ஊற வக்கவும். உளுந்தை ஒரு மணி நேரம் ஊரவைக்கவும். பின்னர் உளுந்தையும் அதன்பிறகு மற்ற தானியங்களையும் மிருதுவாக அரைத்து, உப்பு சேர்த்து 8 மணி நேரம் புளிக்க வைக்கவும். பின்னர் இந்த மாவை இட்லித் தட்டில் ஊற்றி, ஆவியில் வேக வைத்து எடுக்கவும். தக்காளிச் சட்னியுடன் சூடாகப் பரிமாறவும்.


கீரை அடை

தேவையானவை:
முருங்கைக் கீரை - 1 கைப்பிடியளவு
இட்லி அரிசி - 200 கிராம்
துவரம் பருப்பு,
கடலைப் பருப்பு - தலா 100 கிராம்
மிளகாய் வற்றல் - 4
இஞ்சி - ஒரு சிறிய துண்டு
எண்ணெய், கறிவேப்பிலை,
உப்பு - தேவைக்கேற்ப

Story image

செய்முறை: இட்லி அரிசியை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். துவரம் பருப்பு, கடலை பருப்பு ஒன்றாக ஒருமணி நேரம் ஊற வைக்கவும். பின்னர் அரிசியைக் களைந்து, அதனுடன் காய்ந்த மிளகாய், தோல் சீவி நறுக்கிய இஞ்சி, உப்பு சேர்த்து லேசாக, கரகரப்பாக அரைத்து, ஊறவைத்த பருப்பு கலவை, கறிவேப்பிலை சேர்த்து அரைத்து எடுக்கவும். இதனுடன் பொடியாக நறுக்கிய முருங்கைக்கீரையைச் சேர்த்து கலந்து கொள்ளவும். சூடான தவாவில் மாவை பரவலாக ஊற்றி, அடுப்பை மிதமான தீயில் வைத்து, சுற்றிலும் எண்ணெய் விட்டு, இருபுறமும் திருப்பிப் போட்டு நன்றாக வேகவிட்டு எடுக்கவும்.


கேழ்வரகு முறுக்கு

தேவையானவை:
கேழ்வரகு மாவு, வரகரிசி மாவு -
தலா 2 கிண்ணம்
வறுத்த உளுந்து - 1 கிண்ணம்
ஓமம், பெருங்காயம் - தலா 1தேக்கரண்டி
நல்லெண்ணெய், உப்பு - தேவையானவை

Story image

செய்முறை: முதலில் வரகரிசியை நீரில் கழுவி உலர்த்திக் கொள்ளவும். அதனுடன் கேழ்வரகையும் வறுத்து உளுந்தையும் சேர்த்து மாவாக்கிக் கொள்ளவும். இதனுடன் ஓமம், உப்பு, பெருங்காயத்தைச் சேர்க்கவும். தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொள்ளவும். வாணலியில் நல்லெண்ணெய்யை சூடாக்கி நிரப்பிய மாவை முறுக்குகளாகப் பிழிந்து சுட்டு எடுக்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.