உணவைப்  பற்றி  சிந்தியுங்கள்!

சில ஆண்டுகளுக்கு முன் சத்துணவு ஆலோசகர் பூஜா மகிஜா, தன்னுடைய நான்கு வயது மகளுக்கு உணவளித்துக் கொண்டிருந்த போது, "அம்மா, நீங்கள் எனக்களிக்கும் இந்த உணவில் சரியான அளவில் புரோட்டின் இல்லை என்பது
உணவைப்  பற்றி  சிந்தியுங்கள்!


சில ஆண்டுகளுக்கு முன் சத்துணவு ஆலோசகர் பூஜா மகிஜா, தன்னுடைய நான்கு வயது மகளுக்கு உணவளித்துக் கொண்டிருந்த போது, "அம்மா, நீங்கள் எனக்களிக்கும் இந்த உணவில் சரியான அளவில் புரோட்டின் இல்லை என்பது
உங்களுக்குத் தெரியுமா? என்று கேட்டாள்.

அதை கேட்டதும் அதிர்ந்து போன நான் அவளுக்களித்த உணவில் போதுமான சத்து இல்லை என்பது தெரிந்தே அவள் அப்படியொரு கேள்வி கேட்டாள் என்பது புரிந்து கொண்டேன். அவள் கேட்டதில் தவறில்லை.

இன்றைய குழந்தைகள் புத்திசாலிகள், நான் அவளுக்குக் கொடுத்தது என் குடும்பத்தினர் மிகவும் விரும்பும் சிந்திகாதி மற்றும் அரிசி சாதம் ஆகும். இருப்பினும் ஒரு சத்துணவு ஆலோசகராக இருப்பதால் வளரும் குழந்தைகளுக்கு அந்தந்த வயதுக் கேற்ப என்னென்ன சத்தான உணவுகளை கொடுக்கலாம் என்பது பற்றி புத்தகமொன்றை எழுதும் எண்ணம் தோன்றியது.
உடனே "என் பார் நொரிஷ்: மேக் புட் பார் பி எப் எப்' என்ற தலைப்பில் புத்தக மொன்றை எழுதினேன்' என்று கூறும் பூஜா மகிஜா, பிரபல நியூட்டிரிஷனிட்களில் ஒருவராவர்.

""குழந்தைகள் வளரும் போதே நாம் கொடுக்கும் உணவுகளில் என்னென்ன புரத சத்துகள் எந்த விகிதத்தில் அடங்கியுள்ளன அவை எந்தெந்த வகையில் உடல் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும் நல்லது என்பதை சொல்லிக் கொடுப்பதில் தவறில்லை என்று நினைத்தேன். ஒரு தாயாக மட்டுமின்றி சத்துணவு ஆலோசகர் என்ற முறையில் குழந்தைகளுக்கான உணவு முறைகளை இந்தப் புத்தகத்தில் எழுதியுள்ளேன்.

குழந்தைகளுக்கு நாம் அளிக்கும் உணவின் சுவை மற்றும் சத்துகள் குறித்த இப்புத்தகம் அன்னையருக்கு ஒரு சுய உதவி புத்தகமாக இருக்கும். தங்கள் குழந்தைகள் எதை சாப்பிட வேண்டும்? எதை தவிர்க்க வேண்டும்? என்பதை பெற்றோர்களுக்கு அறிவுறுத்தியுள்ளேன். பெரியவர்கள் தங்கள் விருப்பம் போல் சாப்பிடுவதை பார்த்து குழந்தைகளும் அதை பின்பற்ற நினைப்பார்கள்.
பெரியவர்கள் வளர்ந்த பருவத்தில் என்னென்ன சாப்பிடலாம் என்று கற்றுக் கொடுக்க யாரும் இல்லாததால், தங்கள் விருப்பப்படி சாப்பிட பழகியிருக்கலாம்.

இன்றைய குழந்தைகள் வளர்ப்பு முறை மாறுபட்டிருப்பதால் சிறுவயதிலேயே சத்துணவு, உணவு கட்டுப்பாடு போன்ற அவசியம் தேவைப்படுகிறது. பள்ளிக் கூடங்களில் திறமையாக பாடங்களை படிப்பதற்கும், விளையாட்டில் உற்சாகமாக ஈடுபடுவதற்கும் உணவு முறையை கண்காணிப்பது நல்லது.

எடை குறைப்பு மற்றும் உணவு கட்டுப்பாடு பற்றி ஏற்கெனவே நான் எழுதியுள்ள "ஈட் டெலிட்' மற்றும் "ஈட் டெலிட் ஜூனியர்' ஆகிய இரு புத்தகங்களை விட "என் பார் நொரிஷ்' இன்றைய தலைமுறையினருக்குத் தேவையான மாறுபட்ட புத்தகமாகும். அம்மாவுக்கு எதுவும் தெரியாது. அதனால் நல்லது கெட்டது மற்றும் சரியானது தவறானது என்னென்ன என்பதை நானே சொல்லி தருகிறேன் என்று குழந்தைகள் பெரியவர்களுக்கு சொல்லும் காலம் இது. அண்மை கால ஆய்வின்படி சிறுவயதிலேயே எடைகூடும் குழந்தைகள் அதிகமுள்ள நாடுகளில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. விளையாட மைதானங்கள் இல்லை. அவர்கள் கவனத்தை திசை திருப்ப பாஸ்ட் புட், மொபைல், லேப்டாப், வாட்ஸ்அப் என பல நவீன விஞ்ஞான முறை வளர்ந்துவிட்டன.

இதுபோன்ற நேரத்தில் குழந்தைகள் என்ன சாப்பிடுகிறார்கள் என்பதை கண்காணிப்பதோடு, உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான தேகப் பயிற்சியை அளிப்பது பெற்றோரின் கடமை எனகருதுகிறேன். மனித உடலுக்கு 70 சதவிதம் உணவு, 30 சதவிதம் உடற் பயிற்சி தேவை. இவை இரண்டும் முறையாக கடைப்பிடித்தால் சுற்றுச் சூழலிலிருந்து எந்த நோய்க்கிருமிகளும் நம்மை தாக்காமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.

நான் இப்புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள உணவு முறைகளை படித்து குழப்பிக் கொள்ள வேண்டாம். வாழ்நாள் முழுக்க இதில் உள்ளவைகளை கடைப்பிடிக்க வேண்டுமென்பது இல்லை. தேவையானவற்றை மட்டும் எடுத்துக் கொள்ளலாம். வாழ்க்கை முறையை எப்படி அமைத்துக் கொள்ளலாம் என்று எழுதியதை மட்டும் படிக்கலாம். இப்புத்தகத்தை படித்து சந்தேகங்களை கேட்டு நிவர்த்தி செய்து கொள்பவர்களில் பாலிவுட் நட்சத்திரங்கள் உள்பட சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட வாசகர்கள் உள்ளனர். வாழ்க்கையில் நல்லது கெட்டதை சந்திப்பவர்கள் என்னிடம் ஆலோசனை கேட்பதில் தவறில்லை. நிச்சயம் உதவி செய்கிறேன்'' என்கிறார் பூஜா மகிஜா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com