ரம்பூட்டான் பயன்கள்!

தற்போது எங்கும் பரவலாக விற்கப்படுகிற ரம்பூட்டான் பழம், ஆசிய நாடுகளான மலேசியா மற்றும் இந்தோனேஷியாவைத் தாயகமாக கொண்டது.
ரம்பூட்டான் பயன்கள்!

தற்போது எங்கும் பரவலாக விற்கப்படுகிற ரம்பூட்டான் பழம், ஆசிய நாடுகளான மலேசியா மற்றும் இந்தோனேஷியாவைத் தாயகமாக கொண்டது. 

வித்தியாசமான பெயரையும், தோற்றத்தையும் கொண்ட ரம்பூட்டானின் மேற்புறம் முள்ளுமுள்ளாக காணப்படும். பழத்தின் உள்ளே இனிப்பு மற்றும் புளிப்பு சுவை  கலந்த வெண்மையான சதைப்பகுதி காணப்படும். பாதாம் பருப்பு அளவு விதை கொண்ட இப்பழத்தின் நறுமணம் சுண்டி இழுக்கும் தன்மை கொண்டது.

 ரம்பூட்டான் என்பது இந்தோனேஷிய வார்த்தை. இதற்கு முடியடர்ந்த எனப் பொருள். இந்தப் பழத்தின் மேற்பகுதி சிகப்பு நிறத்தில்  காணப்படும். மலேசியா, இந்தோனேஷியா ஆகிய நாடுகளைத் தாயகமாக, இக்கனி கொண்டு இருந்தாலும், தாய்லாந்து, வியட்நாம் மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற  நாடுகளிலும் பரவலாகக் காணப்படுகிறது.    

ரம்பூட்டானில் வைட்டமின்-சி ஏராளமாக இருக்கிறது. அதனால், உடல் பருமனைக் கட்டுப்படுத்த இப்பழம் பயன்படுகிறது. எனவே, உடல் பருமனால் அவதிப்படுவர்கள் ரம்பூட்டானை அடிக்கடி சேர்த்துக் கொள்ளுமாறு ஊட்டச்சத்து நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.

இதய குழாய்களில் உடல்நலத்துக்குக் கேடு விளைவிக்கும் கெட்ட கொழுப்பு சேர்வதை ரம்பூட்டான் தடுக்கிறது. இதன் காரணமாக, மாரடைப்பு ஏற்படுவது  கட்டுப்படுத்தப்படுகிறது.

ரம்பூட்டானில் உள்ள நியாசின் என்ற வேதிப்பொருள், நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த செய்கிறது. ஆன்டி ஆக்சிடெண்ட் இந்தப் பழத்தில் அதிகமாக இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. மேலும் ரம்பூட்டான் பழமானது ஆஸ்துமாவைக் கட்டுப்படுத்துவதோடு கண் ஆரோக்கியத்துக்கும் பெரிதும் உதவுகிறது.

நம்முடைய உடல் உறுப்புகளில் பெரும்பாலானவற்றைப் பாதுகாப்பதில், இதன் பங்கு குறிப்பிடத்தக்கது. முக்கியமாக, தலைமுடி, தோல் மற்றும் கை, கால்  நகங்கள் ஆகியவை பளபளப்புடன் இருக்க ரம்பூட்டான் உதவி செய்கிறது.

நம்முடைய உடல் உறுப்புகள் அனைத்தும் சீராக இயங்க வைக்கிற இரும்புச்சத்து இதில் ஏராளமாக காணப்படுகிறது. இதன் காரணமாக, ஹீமோகுளோபின்  உற்பத்தி அதிகளவில் இருக்கிறது. இது நுரையீரலில் இருந்து ஆக்சிஜனைப் பல திசுக்களுக்கு அனுப்பும் வேலையைத் திறம்பட செய்கிறது.

83 வகையான  வைட்டமின்கள் இதில் உள்ளதாக கண்டறியப்பட்டு உள்ளது. 

நமது எலும்பு மண்டல வளர்ச்சிக்கு உதவக்கூடிய கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற சத்துகள் இந்தக் கனியில் அதிகம் உள்ளன. 

ரம்பூட்டான் பழத்தின் தோல் பகுதி சீதபேதியைக் குணப்படுத்த வல்லது. 

ரம்பூட்டான் பழத்தைத் தொடர்ந்து உணவில் சேர்த்து வருவதால், ரத்தத்தில் சிவப்பு மற்றும் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை குறிப்பிடத் தகுந்த அளவில்  உயர்கிறது என்கிறார்கள் ஊட்டசத்து நிபுணர்கள். உடல் சீரான வளர்ச்சி பெறுவதற்கு, இந்தப் பழம் முக்கிய பங்காற்றுகிறது.

கார்போஹைட்ரேட், புரதம் ஆகிய சத்துகள் இதில் ஏராளமாக இருப்பதால், உடல் உழைப்புக்குத் தேவையான ஆற்றலை அதிகரிக்க செய்கிறது. மேலும், இதைச்  சாப்பிட்ட சிறிது நேரத்துக்குள் எனர்ஜியாக மாற்றம் பெறுகிறது.

நீர்ச்சத்து அதிகம் இருப்பதால், நாக்கு வறண்டு போவதை உடனடியாக நிவர்த்தி செய்கிறது. எனவே, விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு ஏற்ற பழமாகவும்  ரம்பூட்டான் திகழ்கிறது.

புற்றுநோய் பரவுவதைத் தடுத்து, அந்நோயின் பாதிப்புக்கு உள்ளானவர்களைக் குணப்படுத்துவதில் சிறந்த மருந்தாக இந்தப் பழம் திகழ்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com