மகளிர் இதழ்கள்!

மகளிர் நலத்திற்காக முதன்முதலில் கி.பி.1860 - ஆம் ஆண்டு வெளிவந்த இதழ் "அமிர்தவசனி' மகளிர்க்காக தனியாக வெளிவந்த இந்த இதழுக்கு பெரும் வரவேற்பு இருந்தது

மகளிர் நலத்திற்காக முதன்முதலில் கி.பி.1860 - ஆம் ஆண்டு வெளிவந்த இதழ் "அமிர்தவசனி' மகளிர்க்காக தனியாக வெளிவந்த இந்த இதழுக்கு பெரும் வரவேற்பு இருந்தது. மகளிர் அமைப்புகள், சங்கங்கள் தொடர்ந்து ஆதரித்துப் போற்றின. பத்து ஆண்டுகளுக்கு பின்னர் மகளிருக்காக வெளிவந்த இரண்டாவது இதழ் "ஜனவிநோதினி'. 1870-இல் வெளிவந்தது. மூன்றாவதாக 1886-இல் "விவேக போதினி' என்னும் இதழ் வெளிவந்தது.
 1887-ஆம் ஆண்டு "மாதர் மித்திரி' , "மஹாராணி' என்னும் இரண்டு மகளிர் இதழ்கள் வெளிவந்தன. இதற்கு பின்னர் 1891-ஆம் ஆண்டு "வினோதரசமஞ்சரி', "பெண்மதி போதனி' என்னும் இரண்டு இதழ்கள் வந்தன. இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் 1893-இல் வெளிவந்த இதழ் "சுகுண போதினி'. 1899-ஆம் ஆண்டு "மாதர் மனோரஞ்சினி', 1905-இல் "சக்ரவர்த்தினி', 1906-இல் "தமிழ் மாது', 1911-இல் "மாதா போதினி', 1912-இல் "பெண்கல்வி', 1924-இல் "சிந்தாமணி', 1928 -இல் "தமிழ்மகள்', 1936-இல் "மாதர் மறுமணம்', 1937-இல் "கிரகலட்சுமி' ஆகிய மகளிர் இதழ்கள் வெளிவந்தன.
 இந்தியா சுதந்திரமடைந்த பின் 1947-ஆம் ஆண்டு வெளிவந்த மகளிர் இதழ் "புதுமைப்பெண்'. இந்த இதழ் மிகவும் சிறப்பாக விளங்கியது. அனைத்து தரப்புப் பெண்களும் இதை மிகவும் விரும்பி வாங்கிப் படித்தனர். பாராட்டினர். பதினான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் வெளிவந்த மகளிர் இதழ் "பாக்கியலட்சுமி' (1961). 1965-இல் "மண்மகள்', "காதம்பரி' என்றும் இரண்டு மகளிர் இதழ்கள் வெளிவந்தன. அதற்கு பின்னர் "மங்கை', "மங்கையர் மலர்', "சுமங்கலி', "சிநேகிதி' முதலிய இதழ்கள் வெளிவந்தன. இவற்றிற்குப் பிறகு தற்போது இன்னும் பல மகளிர் இதழ்கள் வெளிவருகின்றன.
 ஆதாரம்: மகளிர் இதழ்கள் களஞ்சியம்
 - ஆர். ஏ. ரமா.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com