காளான் கிரீம் சூப்
வாணலியில் வெண்ணெய் சேர்த்து சூடானதும் மைதாவை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வறுக்கவும்.


தேவையானவை:
காளான் - ஒரு பாக்கெட்
வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)
நறுக்கிய பூண்டு - 2 பல்
பிரிஞ்சி இலை - ஒன்று
தைம் இலை - சிறிதளவு
வெள்ளை மிளகுத்தூள் - தேவைக்கேற்ப
ஒயிட் சாஸ் - 100 மில்லி
வெண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப ஒயிட் சாஸ் செய்வதற்கு:
வெண்ணெய் - 3 தேக்கரண்டி
மைதா - 3 தேக்கரண்டி
பால் - அரை லிட்டர்
உப்பு - சிறிதளவு
செய்முறை:
வாணலியில் வெண்ணெய் சேர்த்து சூடானதும் மைதாவை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வறுக்கவும். பின் அடுப்பை அணைத்து, பாலை கொஞ்சம் கொஞ்சமாக விட்டு கட்டியில்லாமல் கரைத்து மறுபடியும் அடுப்பில் வைத்து கொதிக்கவிடவும். இதில் சிறிதளவு உப்பு போட்டு கெட்டியாகும் வரை கொதிக்கவிட்டு இறக்கினால், ஒயிட் சாஸ் ரெடி.வேறொரு வாணலியில் வெண்ணெய் சேர்த்து சூடானதும் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கும்போது பூண்டு, பிரிஞ்சி இலை, தைம் இலை சேர்த்து வதக்கி, நறுக்கிய காளானை சேர்த்து வேகும் வரை வதக்கி, தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும். எல்லாம் சேர்த்து கொதி வந்தவுடன், ஒயிட் சாஸ், உப்பு, வெள்ளை மிளகுத்தூள் சேர்த்து, மேலும் ஒரு கொதி வந்தவுடன் இறக்கி, பரிமாறவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...