தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

கோல்டன் விசா!

தமிழகத்தின் திண்டிவனத்தைச் சேர்ந்தவர் நஸ்ரின் பேகம்.  ஆயுர்வேத மருத்துவரான இவர், கடந்த 2013-ஆம் ஆண்டு முதல்  துபாயில்  மருத்துவராக பணிபுரிந்து வருகிறார்.  

News image
Updated On :16 ஆகஸ்ட் 2021, 6:30 pm

DIN


தமிழகத்தின் திண்டிவனத்தைச் சேர்ந்தவர் நஸ்ரின் பேகம். ஆயுர்வேத மருத்துவரான இவர், கடந்த 2013-ஆம் ஆண்டு முதல்  துபாயில்  மருத்துவராக பணிபுரிந்து வருகிறார்.  கடந்த மூன்று ஆண்டுகளாக, துபாய ஆயுஷ் மெடிக்கல் டெரிட்ரி மேனேஜிங் பார்ட்னராக நஸ்ரின் பேகம் பணியில் உள்ளார்.

இந்நிலையில்,  நஸ்ரினுக்கு கோல்டன் விசா வழங்கி கெளரவிக்க துபாய் அரசு முடிவு செய்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகம் சார்பில் வழங்கப்படும் கோல்டன் விசா, 10 ஆண்டுகள் செல்லுபடியாகக் கூடியது. சிறந்த முதலீட்டாளர்கள், தங்கள் துறைகளில் சிறந்த பங்களிப்பை வழங்கியவர்கள்,  தொழிலதிபர்களுக்கு இந்த விசாவை வழங்கி அந்நாடு கெளரவிக்கிறது. அமீரகத்தின் குடிமக்களுக்கு ஒப்பாக இந்த விசாவை வைத்திருப்பவர்கள் கருதப்படுவார்கள். இந்திய நடிகர்களான ஷாருக்கான், சஞ்சய் தத், டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா ஆகியோர் அமீரகத்தின் கோல்டன் விசாவை பெற்றுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.