இன்று தமிழகத்தை அடைகிறது கா்நாடக அணை காவிரி நீா்!தமிழக பட்ஜெட் நாளை தாக்கல்: முக்கிய அறிவிப்புகள் வெளியாகின்றனஇந்தியப் பொருளாதாரம் 7.7% வளா்ச்சி!தமிழகத்தில் ஆக. 9 வரை மழைக்கு வாய்ப்புஉறுப்பு மாற்று சிகிச்சையில் தமிழகம் முதலிடம்!
/

வெஜிடபிள் சாண்ட்விச் 

வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கவும். தக்காளி, குடமிளகாயைப் பொடியாக நறுக்கவும். வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு கேரட், வெங்காயம், குடமிளகாய், தக்காளி, உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். புதினாவை வத

News image
Updated On :28 ஜனவரி 2024, 9:27 am IST


தேவையானவை: 

கோதுமை பிரெட் - ஒரு பாக்கெட்
கேரட் துருவல் - ஒரு கிண்ணம்
பெரிய வெங்காயம், தக்காளி,  குடமிளகாய் - தலா 1
இஞ்சி விழுது - ஒருதேக்கரண்டி
நறுக்கிய கொத்துமல்லி - சிறிதளவு
வெண்ணெய் - 100 கிராம்
புதினா இலை - ஒரு கைப்பிடி அளவு
எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை:

வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கவும். தக்காளி, குடமிளகாயைப் பொடியாக நறுக்கவும். வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு கேரட், வெங்காயம், குடமிளகாய், தக்காளி, உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். புதினாவை வதக்கி, மிக்ஸியில் அரைத்து, அதனுடன் இஞ்சி விழுது, வெண்ணெய் சேர்த்துக் குழைத்து பிரெட்டில் தடவவும். அதன்மேல் பரவலாக வதக்கிய காய்களை வைத்து, கொத்துமல்லி தூவி, மேலே ஒரு ஸ்லைஸ் பிரெட் வைத்து, டோஸ்ட்டரில் டோஸ்ட் செய்து கொடுக்கவும்.

குறிப்பு: கோதுமை பிரெட் நார்ச்சத்து உடையது. காலை, மாலை நேரத்தில் சாப்பிடக்கூடிய அருமையான டிபன் இது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.