புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

வாழைப்பூ கட்லெட் 

வாழைப்பூவை ஆய்ந்து சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பின்னர், வாணலியில் எண்ணெய்விட்டு சோம்பு தாளிக்கவும், அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய்

News image
Updated On :24 ஆகஸ்ட் 2021, 2:28 pm

தினமணி

தேவையானவை:

வாழைப் பூ - 1 கிண்ணம்
வெங்காயம் - 50 கிராம்
கேரட் - 100 கிராம்
உருளைக்கிழங்கு - 100 கிராம்
பீன்ஸ் - 50 கிராம்
பச்சைப்பட்டாணி - 50 கிராம்
இஞ்சி - பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
மஞ்சள் தூள் - அரைதேக்கரண்டி
ரஸ்க் தூள் - 50 கிராம்
சோம்பு - 1 தேக்கரண்டி
எண்ணெய் , உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை:

வாழைப்பூவை ஆய்ந்து சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பின்னர், வாணலியில் எண்ணெய்விட்டு சோம்பு தாளிக்கவும், அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், வாழைப்பூ, கேரட், பீன்ஸ், பச்சைப் பட்டாணி, இஞ்சி- பூண்டு விழுது, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கி, மசித்த உருளைக்கிழங்கைச் சேர்க்கவும். பின்னர் ரஸ்க் தூள் கலந்து பிசைந்து கட்லெட் வடிவத்தில் தட்டிவைக்கவும். கட்லெட்டுகளை சூடானஎண்ணெய்யில் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.