புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

செம்பருத்தி வெந்தய  தோசை 

பச்சரிசியை  அரை மணி நேரம்  ஊற வைக்கவும்.  சிவப்பு  அவலையும்  அரை மணி நேரம்  ஊற வைக்கவும்.

News image
Updated On :25 ஆகஸ்ட் 2021, 12:30 am

DIN

தேவையானவை: 

சிகப்பு செம்பருத்தி பூ - 10
முளைக்கட்டிய வெந்தயம்  -  1கிண்ணம்
பச்சரிசி  - 100 கிராம்
சிவப்பு  அவல்  - 100  கிராம்
பச்சைமிளகாய்  - 2
தேங்காய்த் துருவல்  - அரை கிண்ணம்
சீரகம்  - 1 தேக்கரண்டி
உப்பு  - தேவைக்கேற்ப 
எண்ணெய்  - 50 மில்லி

செய்முறை: 

பச்சரிசியை  அரை மணி நேரம்  ஊற வைக்கவும்.  சிவப்பு  அவலையும்  அரை மணி நேரம்  ஊற வைக்கவும்.  பின்னர்  ஊறிய  பச்சரிசி,  சிவப்பு அவல்,  பச்சை மிளகாய்,  சீரகம் ,  தேங்காய்த் துருவல்,  முளைகட்டிய வெந்தயம்,   செம்பருத்தி ஆகியவற்றை  மிக்ஸியில் சேர்த்து  சிறிதளவு தண்ணீர்விட்டு  அரைத்துக் கொள்ளவும்.  உப்பு சேர்த்துக் கலக்கவும்.  மாவை  6 மணி நேரம் புளிக்கவைக்கவும். தோசை தவாவில்  மாவை   வெல்லிய  தோசைகளாக  ஊற்றி இருபுறமும்  எண்ணெய்விட்டு  சுட்டெடுக்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.