சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

ஞாபகமறதி: பெண்கள் பாதிக்கப்படுவது ஏன்?

அல்சைமர் எனப்படும் ஞாபகமறதி வியாதி, ஆண்களைவிட பெண்களைத்தான் அதிகம் பாதிக்கிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

News image
Updated On :1 மார்ச் 2021, 6:48 am

ஆ. கோ​லப்​பன்


அல்சைமர் எனப்படும் ஞாபகமறதி வியாதி, ஆண்களைவிட பெண்களைத்தான் அதிகம் பாதிக்கிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

நினைவுத்திறனையும் மூளை செயல்பாடுகளையும் பாதிக்கக் கூடிய அல்சைமர் நோயால் உலகில் ஐந்து கோடிக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இந்த எண்ணிக்கை மேலும் வேகமாக உயர்ந்து வருகிறது.

வருகிற 2030-ஆம் ஆண்டில் உலகெங்கும் ஏழரைக்கோடியாக உயரும் என்றும், 2050-இல் அது 13 கோடியே 15 லட்சமாக அதிகரிக்கும் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஆண்களுடன் ஒப்பிடுகையில் பெண்கள் அல்சைமரால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். ஆஸ்திரேலியாவில், அல்சைமர் தொடர்பான பிரச்னைகளால் இறப்பவர்களில் மூன்றில் இருவர் பெண்கள்.

அமெரிக்காவிலும் அல்சைமர் பாதிப்புகளுடன் காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கும் மூவரில் இருவர் பெண்கள். பொதுவாக பெண்களை அதிகம் பாதிக்கும் நோய்கள் என சில உண்டு. ஆனால் சில பிரிவுகளில் அந்த நோய்களை விட அல்சைமரே பெண்களை அதிகம் பாதித்திருக்கிறது.

60 வயதுக்கு மேற்பட்ட அமெரிக்கப் பெண்களில் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்படுவோரை விட அல்சைமரால் பாதிக்கப்படுவோர் இரு மடங்கு அதிகம்.

இங்கிலாந்து, வேல்ஸ், ஆஸ்திரேலியாவில் இதயநோயைப் பின்னுக்குத்தள்ளி பெண்களிடையே அதிக அளவில் இறப்புக்குக் காரணமான நோயாக அல்சைமர் திகழ்கிறது.

இதை தற்போதைய மருத்துவ நடைமுறைகளால் கட்டுப்படுத்துவது கடினம்' என்கிறார், அனடோநெல்லா சன்ட்கின்சாதா. இவர் சுவிட்சர்லாந்தில் அல்சைமர் சிகிச்சை நிபுணராகவும், உடற் கூறு நிபுணராகவும் உள்ளார். அவர் சொல்வது என்ன?

""பொதுவாக ஆண்களைவிட பெண்களின் ஆயுட்காலம் அதிகம் என்பதால் அவர்களே இதன் தாக்குதலால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

ண்களிடையே மன அழுத்தப் பிரச்னை இருக்கும் நிலையில் அது அல்சைமருக்கு வழிவகுக்கிறது. மேலும், பிரசவ கால சிக்கல்கள், மாதவிடாயை அறுவை சிகிச்சை மூலம் நிறுத்துவதும் பிற்காலத்தில் அல்சைமர் ஏற்படக்காரணமாகின்றன'' என்கிறார்.

""சமூக ரீதியான பொறுப்புகள், காரணிகளும் அல்சைமருக்கான வாய்ப்புகளை அதிகரிக்கின்றன. பெற்றோரை, குழந்தைகளை, கணவரை பார்த்துக் கொள்ளும் பொறுப்புகளும் பின்னாளில் அல்சைமருக்கான வாய்ப்புகளை உருவாக்குகின்றன''

என ஆரோக்கிய உடற்கூறியல் நிபுணர் ஆன்மேரி ஷு மாக்கர் கூறுகிறார். இவர், மரியா தெரசா பெரட்டி, ஜுரிச் பல்கலைக்கழகத்தில் அல்சைமர் குறித்து ஆய்வு செய்து வரும் மருத்துவ ஆராய்ச்சியாளர் ஆவார்.

பெண்களின் மூளை குறித்து ஆய்வு செய்யும் திட்டத்துக்கு ஆலோசனைகளை வழங்கி வரும் ஓர் அமைப்பு, அல்சைமர் குறித்த விரிவான ஆய்வுகளை வெளியிட்டுள்ளதுடன், பாலின அடிப்படையில் அல்சைமருக்கான ஆய்வுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

அல்சைமருடன் உள்ள ஆண்கள் பெண்களுக்கு இடையில் காணப்படும் மனரீதியான வெளிப்பாடுகள், அறிவாற்றல் ரீதியான வேறுபாடுகளை தங்கள் ஆய்வுக்கட்டுரை தெளிவாகக் கூறுகிறது என்கிறது இந்த ஆலோசனைக் குழு.
""இவற்றைக் கொண்டு அல்சைமருக்கு மேம்பட்ட சிகிச்சையை உருவாக்கலாம்'' என்கிறார் பெரட்டி .

மூளையில் சேர்ந்துள்ள இருவகை நச்சு புரதங்களைக் கொண்டு அல்சைமர் தற்போது கண்டுபிடிக்கப்படுகிறது. அல்சைமரால் பாதிக்கப்பட்ட ஆண் மற்றும் பெண்ணுக்கு இடையில் இந்தப் புரதத்தின் அளவில் வித்தியாசம் இல்லை என்கிறது இந்த அறிக்கை. ஆனால் அல்சைமரால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அறிவாற்றல் திறன் குறைந்துள்ளதும் இதில் தெரிய வருகிறது.

ஆண்களை விட பெண்களுக்கு அதிக அளவில் இந்நோய் இருப்பதைக் கண்டறிந்த பிறகு இதற்கு என்ன காரணம் என்பதை ஆராய வேண்டியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.