கடலைமாவுடன் சிறிது மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு, ஒரு தேக்கரண்டி பால் கலந்து முகத்தில் தடவி, காய்ந்தவுடன் மிதமான சுடுநீரில் கழுவ, முகம் மிருதுவாகும்.
உள்ளங்கைகளின் கடினத் தன்மை மறைந்து மிருதுவாக மாற, ஆலிவ் எண்ணெய்யுடன் சர்க்கரை கலந்து உள்ளங்கைகளில் தேய்த்து கழுவ வேண்டும்.
பச்சை உருளைக்கிழங்கின் சாற்றை முகத்தில் தடவி வர வெயிலினால் ஏற்படும் கருமை நிறம் மாறும்.
முள்ளங்கி சாறு மற்றும் மோர் தலா இரண்டு தேக்கரண்டி எடுத்து கலந்து, முகத்தில் தடவி, ஒரு மணிநேரம் கழித்து, வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவி வர, முகத்தில் ஏற்படும் தவிட்டு நிறமுள்ள புள்ளிகள் மறையும்.
சின்னம்மையால் ஏற்பட்ட வடு மறைய, 6 மாதம் தொடர்ந்து தேங்காய் தண்ணீரை முகத்தில் தடவி வர வேண்டும்.
பூசணிக்காயை சிறு துண்டுகளாக்கி அதை கண்களை சுற்றி வைக்க கருவளையம் மறையும்.
புளித்த மோரை முகத்தில் 15 நிமிடம் தடவி, மிதமான சுடுநீரில் கழுவ முகம் பொலிவு பெறும். இதை தொடர்ந்து 15 நாள்களுக்கு செய்து வர நல்ல பலன் கிடைக்கும்.
முழங்கை (முட்டி) கருப்பாகவும், சொர சொரப்பாகவும் இருந்தால், தேங்காய் எண்ணெய்யுடன் எலுமிச்சை சாறு கலந்து தடவி வர மிருதுவாக மாறும்.
உலர்ந்த சருமம் உள்ளவர்கள் கிளிசரினுடன் ரோஸ் வாட்டர் மற்றும் எலுமிச்சைச் சாறு கலந்து முகத்தில் தடவலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சுருளி அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி
நாளைய மின்தடை: சத்துவாச்சாரி
பொன்னேரி அருகே 500 போதை மாத்திரை, 1.1 கிலோ கஞ்சா பறிமுதல்
பைக்கை மறித்து தங்க செயின் பறிக்க முயற்சி: 2 போ் கைது
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



