

தேவையானவை:
பேபிகார்ன் - 10 (துண்டுகளாக்கப்பட்டது)
சோள மாவு - 2 தேக்கரண்டி
மைதா - 1 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
மிளகாய்த் தூள் - அரை தேக்கரண்டி
உப்பு, எண்ணெய்- தேவைக்கேற்ப
குடைமிளகாய் - 1
பூண்டு - 10 பல்
பெரிய வெங்காயம் - 1
சோயா சாஸ் - அரை தேக்கரண்டி
தக்காளி சாஸ் - 2 தேக்கரண்டி
சில்லிசாஸ் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை:
பேபி கார்னை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். ஒரு கிண்ணத்தில் மைதா, சோள மாவு, இஞ்சி பூண்டு விழுது, மிளகாய்த் தூள், உப்பு மற்றும் வேக வைத்துள்ள பேபி கார்னை சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து நன்கு பிரட்டி 15 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு வாணலியில் 1 தேக்கரண்டி எண்ணெய்விட்டு காய்ந்ததும், பிரட்டி வைத்துள்ள பேபி கார்னை போட்டு பொன்னிறமாக வறுத்து தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு அதே வாணலியில் 1தேக்கரண்டி எண்ணெய்விட்டு காய்ந்ததும், பொடியாக நறுக்கிய பூண்டு சேர்த்து நன்கு வதக்க வேண்டும். பின் அதில் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கி, பின் குடைமிளகாயை சேர்த்து 2 நிமிடம் வதக்கிவிட வேண்டும்.
அடுத்து அதில் சோயா சாஸ் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். பிறகு தீயை குறைத்து, சில்லி சாஸ், தக்காளி சாஸ், சிறிது தண்ணீர் தெளித்து, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும். இறுதியில் அதில் வறுத்து வைத்துள்ள பேபி கார்னை சேர்த்து நன்கு கிளறி இறக்கினால், பேபி கார்ன் மஞ்சூரியன் ரெடி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்கு வங்க பாலியல் கொலைச் சம்பவம்: பெண் மருத்துவரின் தாயாா் பாஜக சாா்பில் போட்டி?

கரூா் மாவட்டத்தில் ரூ. 5.29 லட்சம் பறிமுதல்

விளாத்திகுளம் மாணவி படுகொலை வழக்கில் இளைஞர் கைது

மேற்காசியப் போா் உலகுக்கு சோதனைக் காலம்: இந்தியா கவலை
வீடியோக்கள்

Dhurandhar 2 The Revenge movie review | Ranveer Singh
தினமணி வீடியோ செய்தி...

Youth movie review | Ken Karunas | Suraj | GV Prakash | Anishma Anilkumar
தினமணி வீடியோ செய்தி...

தினமணி ஈகைப் பெருநாள் மலர் அறிமுக விழா
தினமணி வீடியோ செய்தி...

நாம் தமிழர் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த சீமான்!
தினமணி வீடியோ செய்தி...

