தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

காளான் நீண்ட நாள் கெடாமல் இருக்க...

பட்டன்காளான்களை  உப்பு கலந்த தண்ணீரில் போட்டு ஒரு கொதிவிட்டு எடுத்து, வடிகட்டி ஆற வைத்து காற்று புகாத  டப்பாவினுள் வைத்தால் 1 வாரம் வரை கெடாமல்  இருக்கும்.

News image
Updated On :30 ஜூன் 2021, 12:05 pm


பட்டன்காளான்களை  உப்பு கலந்த தண்ணீரில் போட்டு ஒரு கொதிவிட்டு எடுத்து, வடிகட்டி ஆற வைத்து காற்று புகாத  டப்பாவினுள் வைத்தால் 1 வாரம் வரை கெடாமல்  இருக்கும்.

கத்திரிக்காய்களை பிளாஸ்டிக் பைகளில் போட்டு ஃபிரிட்ஜினுள் வைக்காமல், நியூஸ் பேப்பரில் சுற்றி வைத்தால் நீண்ட நாள்கள் கெடாமலிருக்கும்.

ஏலக்காய், கிராம்பு மற்றும் மிளகு போன்றவற்றை ஒன்றாக காற்று புகாத ஒரே பாட்டிலில் போட்டு வைத்தால் நீண்ட நாள்
களுக்கு கெடாமலிருக்கும்.

மிளகாய்ப் பொடி வைத்துள்ள பாட்டிலில் சிறியதுண்டு பெருங்காயத்தைப் போட்டு வைத்தால் நீண்ட நாள்களுக்குக் கெடாமலிருக்கும் வாசனையும் கூடும்.

உலர்ந்த திராட்சை, பேரீச்சம் பழம் போன்றவற்றை வைத்துள்ள பாட்டில்களில் ஒன்றிரண்டு கிராம்புகளைப் போட்டு வைத்தால் கெடாமலிருக்கும்.

பன்னீரை நீண்ட நாள்களுக்குக் கெடாமல் வைத்திருக்க வினிகர்" தெளித்து பாலித்தீன் பையினுள் போட்டு வைக்கவும்.

பழங்களை ஃப்ரிட்ஜினுள் வைக்கும் போது பாலித்தீன் பையினுள் போட்டு வைக்காமல் திறந்த பாத்திரத்தில் வைத்தால் நீண்ட நாள்களுக்குக் கெடாது.

பொரித்த அப்பளம், சிப்ஸ், பிஸ்கெட்டுகள் போன்றவற்றை பாலித்தீன் பையினுள் போட்டு ஃப்ரிட்ஜினுள் வைத்து விட்டால் நீண்ட நாள்களுக்கு கரகரப்பாகவே இருக்கும்.

பச்சை மிளகாய்களை காம்பு நீக்கிவிட்டு  அழுத்தமான பிளாஸ்டிக் கவரில் போட்டு சிறிது துளையிட்டு ஃபிரிட்ஜினுள் வைத்துவிட்டால் ஒரு மாதம் வரை அப்படியே இருக்கும்.

அப்பளம், பப்படம் போன்றவற்றின் மேல் சிறிது மிளகாய் பொடி மற்றும் பெருங்காயத் தூளைத் தூவி வைத்து விட்டால் எறும்புகளோ, வேறு பூச்சிகளோ அண்டாமலிருக்கும்.

புதினாவை நன்றாக அரைத்து சில துளி எலுமிச்சைச் சாறுகலந்து "ஃபிரீசரில்" வைத்திருந்தால் நிறமும் மணமும் நீங்காமல் சில நாள்கள் இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.