மருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

டிப்ஸ்... டிப்ஸ்...

சோளத்தை வேக வைக்கும்போது ஒரு சிட்டிகை சர்க்கரை சேர்க்க, அதில் இயற்கையாக உள்ள இனிப்புச்சுவை தூக்கலாக தெரியும். ருசியும் கூடும்.

News image
Updated On :17 மார்ச் 2021, 6:10 pm IST


சோளத்தை வேக வைக்கும்போது ஒரு சிட்டிகை சர்க்கரை சேர்க்க, அதில் இயற்கையாக உள்ள இனிப்புச்சுவை தூக்கலாக தெரியும். ருசியும் கூடும்.

மோர்க்குழம்புக்குப் புளித்த மோர் இல்லையென்றால், மூன்று புளிப்பான தக்காளியை மோர்க் குழம்புக்குத் தேவையான சாமான்களுடன் சேர்த்து அரைத்தால் புளிப்புச் சுவை வந்துவிடும்.

கொத்தமல்லி மலிவாக கிடைக்கும்போது அதை வாங்கி நறுக்கி, அத்துடன் உப்பு, பச்சை மிளகாய் சேர்த்து அரைத்துவடையாகத் தட்டி வெயிலில் காய வைத்து வடகமாகச் செய்து ரசத்தில் பொரித்துப் போடலாம்.

சாதம் குழைந்துவிட்டால், பாதி எலுமிச்சைப் பழத்தைப் பிழிந்து, பிறகு வடித்தால் சாதம் பூப்போல் "பொல பொல' வென இருக்கும்.

காலையில் அரைத்த தேங்காய்ச் சட்னி மீதமாகிவிட்டால் அத்துடன் புளித்த மோர் அல்லது தயிருடன் மஞ்சள்தூள் சேர்த்து தாளித்துக் கொதிக்கவிட வேண்டும். இதுவே மதிய உணவுக்கான மோர்க்குழம்பு ஆகிவிடும்.

வெந்தயக்குழம்பு தயார்செய்து இறக்கும் போது ஒரு டீஸ்பூன் எள்ளுப்பொடியைப் போட்டால் வாசனையாகவும் சுவையாகவும் இருக்கும்.

மீந்துபோன வாழை, உருளை சிப்ஸை வீணாக்காமல் மிக்ஸியில் கரகரப்பாகப் பொடித்து, பொரியலுக்குத் தூவலாம். மாறுபட்ட சுவையும் மணமும் கிடைக்கும்.

பாயசம் நீர்க்க இருந்தால், அதில் வாழைப்பழத்தைப் பிசைந்து போட்டு, கொஞ்சம் தேனும் கலந்தால் போதும்... சுவையான கெட்டிப் பாயசம் ரெடி.

உருளைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு ரோஸ்ட் செய்யும்போது மேலாக சிறிது காய்ந்த ரொட்டித் தூளைத் தூவினால் கரகரப்பாகவும் ருசியாகவும் இருக்கும்!

க்ரீம் பிஸ்கட்டிலுள்ள க்ரீமை எடுத்து ஃப்ரிட்ஜில் வைத்து... பாயசம், கீர், ஃப்ரூட் சாலட், பூசணி அல்வா ஆகியவற்றில் சேர்த்தால் சுவை கூடும்.

வேப்பிலைக் கொழுந்தில் வெண்ணெய் மற்றும் மோர் விட்டு அரைத்து தீப்புண் ஏற்பட்ட இடத்தில் தடவி வர... எரிச்சல் அடங்கும்; புண் எளிதில் குணமாகும்.

உருளைக்கிழங்கை அரை மணி நேரம் உப்புத்தண்ணீரில் ஊற வைத்துவிட்டு வேகவைத்தால் சீக்கிரம் வெந்துவிடும்.

சாம்பார் பொடி அரைக்கும்போது அத்துடன் ஒரு கைப்பிடி கல் உப்பு போட்டு அரைத்தால் வண்டுகள், பூச்சிகள் வராது.

சூடான எண்ணெயில் சிறிதளவு மைதா மாவு சேர்த்த பிறகு, எதைப் பொரித்தாலும் வாணலியில் ஒட்டாது.

துவரம்பருப்பை வேக வைக்கும்போது சிறிய தேங்காய்த்துண்டை நறுக்கிப்போட்டால் பருப்பு விரைவில் வெந்து, பக்குவமாக இருக்கும்.

தோசைக்கு மாவு அரைக்கும்போது கொஞ்சம் வெண்டைக் காயையும் சேர்த்து அரைத்தால் தோசை பஞ்சு மாதிரி இருக்கும்.

தக்காளி சட்னி செய்யும்போது அதில் சிறிது எள்ளை வறுத்துப் பொடி செய்து போட்டு, அதில் சிறிது எலுமிச்சைப்பழச் சாறு கலந்தால் ருசி அதிகமாக இருக்கும்.

கருணைக்கிழங்கை வேகவைக்கும்போது சிறிதளவு வெல்லம் சேர்த்து வேகவைத்தால், வெகு சீக்கிரம் பஞ்சுபோல் வெந்துவிடும்.

உளுந்து வடை செய்யும்போது, ஒரு கை சாதம் சேர்த்து அரைத்து வடை தட்டினால் உள்ளே மெத்தென்றும், வெளியே மொறுமொறுப்பாகவும் இருக்கும். உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து மாவுடன் சேர்த்து அரைத்துத் தட்டினாலும் மொறுமொறுப்பாக இருக்கும்.

இட்லி மிளகாய்ப்பொடியுடன் புளி, கறிவேப்பிலை, பொரித்த அப்பளத் துண்டுகளைச் சேர்த்து அரைக்க, திடீர் சுவைமிகு துவையல் ரெடி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.