
விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் தொடர்களில் மிகவும் பிரபலமான தொடர் பாரதி கண்ணம்மா. இத்தொடரில் நாயகி கண்ணம்மாவாக அறிமுகமாகி, மக்கள் மனதில் தனக்கென ஓர் இடத்தை தக்கவைத்துக் கொண்டிருப்பவர் ரோஷினி. இவர், திடீரென தொடரைவிட்டு விலகவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருப்பது ரசிகர்களை அதிர்ச்சியடைச் செய்திருக்கிறது.
மேலும், தற்போது உள்ள நிலையில் இந்த வாரம் மட்டுமே ரோஷினி கண்ணம்மாவாக நடிப்பார் என்றும் கூறப்படுகிறது. ஆனால், இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இன்னும் வெளியாகவில்லை.
அதேசமயம், ரோஷினிக்குப் பதிலாக வினுஷா தேவி என்பவர் "கண்ணம்மா' கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மாடலிங், டிக்டாக் மூலம் பிரபலமானவர் வினுஷா. இவரும் டஸ்க்கி ஸ்கின் டோன் கொண்டவர் என்பதால் இந்தக் கதாபாத்திரத்துக்குப் பொருத்தமாக இருப்பார் என்று இவர் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், பாரதி கண்ணம்மா' தொடரிலிருந்து ரோஷினி சில சொந்த காரணங்களுக்காக வெளியேறுகிறார் என்று ஒரு தரப்பினரும், சினிமா வாய்ப்புகளுக்காக விலகுகிறார் என ஒரு தரப்பினரும் சொல்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.