பாரா ஒலிம்பிக்கில் தமிழக மாணவி!

குமரி மாவட்டத்தை சேர்ந்த சமீஹா பர்வின் என்ற மாணவி போலந்து நாட்டில் இந்த மாதம் நடைபெறவிருக்கும் காதுகேளாதோருக்கான ஒலிம்பிக் நீளம் தாண்டுதல் போட்டியில் பங்கேற்பதற்கு இந்தியாவிலிருந்து தகுதி 
பாரா ஒலிம்பிக்கில் தமிழக மாணவி!

குமரி மாவட்டத்தை சேர்ந்த சமீஹா பர்வின் என்ற மாணவி போலந்து நாட்டில் இந்த மாதம் நடைபெறவிருக்கும் காதுகேளாதோருக்கான ஒலிம்பிக் நீளம் தாண்டுதல் போட்டியில் பங்கேற்பதற்கு இந்தியாவிலிருந்து தகுதி பெற்றிருக்கிறார்.
தேர்ந்தெடுக்கப்பட்டு குழுவில் இடம்பெற்றிருந்த ஒரே மங்கை என்பதற்காக விளையாட்டு அமைச்சகம் சமீஹா  தேர்வை ரத்து செய்திருந்தது. காரணம், ஒரே ஒரு பெண்ணை தனியாக அனுப்ப முடியாது என்றும் அவருக்கு என்று தனியாக ஒரு பெண் பயிற்சியாளரை நியமிக்க முடியாது என்றும் அமைச்சகம் விளக்கம் கூறியிருந்தது.
ஆனால், இறுதிப் பட்டியலில் சமீஹாவின் பெயரையும் உட்படுத்துமாறு மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதி மன்றம் அறிவுறுத்தியுள்ளது. இதனால், சமீஹாவிற்கான விசா மற்றும் மற்ற பயணத்துக்கான அனுமதிகள் அனைத்தும் போர்க்கால அடிப்படையில் கிடைத்தன.  இதன்  பலனாக சமீஹா போட்டியில் கலந்து கொள்ள செல்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com