ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

தவலை அடை

பச்சரிசியுடன் மிளகு, சீரகம் சேர்த்து ரவை போல பொடித்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்தம்பருப்பு, பெருங்காயத்தூள், மிளகாய் வற்றல் தாளித்து, அதில் தேங்காய் துருவலை சேர்க்கவும்.

News image
Updated On :8 அக்டோபர் 2021, 12:33 pm

தினமணி

தேவையானவை: 

பச்சரிசி - ஒரு கிண்ணம்
மிளகு - ஒரு தேக்கரண்டி
சீரகம் - அரைத்தேக்கரண்டி
தேங்காய்த் துருவல் - கால் கிண்ணம்
கடுகு - கால் தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 2
உளுந்தம் பருப்பு - அரை தேக்கரண்டி
பெருங்காயத்தூள் - கால் தேக்கரண்டி
எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப


செய்முறை: 

பச்சரிசியுடன் மிளகு, சீரகம் சேர்த்து ரவை போல பொடித்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்தம்பருப்பு, பெருங்காயத்தூள், மிளகாய் வற்றல் தாளித்து, அதில் தேங்காய் துருவலை சேர்க்கவும். அதனை லேசாக வதக்கி, உப்பு, தண்ணீர் சேர்க்கவும். அது கொதிக்க ஆரம்பிக்கும்போது பொடித்த ரவையை மெதுவாகப் போட்டுக் கிளறி, கெட்டியாக வரும்போது இறக்கவும். ஆறியதும், சிறுசிறு அடைகளாகத் தட்டி தோசைக்கல்லில் போட்டு இருபுறமும் எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.