தமிழகத்தில் முதல் முறையாக தேசிய நலவாழ்வு குழுமத்தின் உதவியாளராக திருநங்கை தமிழ்ச்செல்வி நியமிக்கப்பட்டுள்ளார். ராணிப்பேட்டையை சேர்ந்த இவர், தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்ட முதல் திருநங்கை செவிலியர் ஆவார். தேசிய நலவாழ்வு குடும்பத்தின் கீழ் திருநங்கைகளுக்கான சிகிச்சை மையங்கள் மதுரை மற்றும் சென்னையில் உள்ளன. இவற்றில் சென்னையில் தமிழ்ச்செல்வி பணிபுரிய உள்ளார். இதற்கான ஆணையை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.
முதல் துபாஷி
தமிழக சட்டமன்ற வரலாற்றில் முதன்முறையாக பெண் ஒருவர் சபாநாயகரின் உதவியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை சட்டமன்ற அலுவலகத்தில் 1990- ஆம் ஆண்டு உதவியாளராக பணியில் சேர்ந்த ராஜலட்சுமி என்பவர் சபாநாயகர் அப்பாவுக்கு உதவியாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தற்போது, 60 வயதாகும் அவர், மே மாதம் பணி நிறைவு பெறவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வழக்கமாக ஆண்கள் மட்டுமே இதுவரை நியமிக்கப்பட்டு வந்தநிலையில், பெண் ஒருவர் இந்த பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறையாகும். எனவே, இதன்மூலம் ராஜலட்சுமி சபாநாயகரின் முதல் பெண் உதவியாளராக கருதப்படுகிறார். ராஜலட்சுமி துபாஷ் சீருடையில் இருக்கும் படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
மருத்துவருக்கு கல்பனா சாவ்லா விருது!
கல்பனா சாவ்லா விருது பெற்ற மருத்துவர் ப.சண்முகப்பிரியா, மதுரை அனுப்பானடி அரசு நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையத்தில் மருத்துவ அலுவலராக இருந்தவர். துணிவு, தைரியத்துடன் கரோனா நோய்ப் பரவலில் மருத்துவ சேவை செய்தவர். இரண்டாவது அலையின் போது 582 காய்ச்சல் முகாம்களில் பங்கேற்று 10,961 பேருக்கு ஸ்வாம் சோதனை மாதிரிகளை சேகரித்தவர். கரோனா தொற்றுக்கு ஆளாகி 2021, மே மாதம் காலமானார்.
இவரது சேவையைப் போற்றும் வகையில் கல்பனா சாவ்லா விருது வழங்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

செயின்ட் - கோபைன் தொழிற்சாலையைப் பார்வையிட்ட முதல்வர் விஜய் - புகைப்படங்கள்
நேபாளத்தில் கலவரம்: உ.பி.யில் 7 மாவட்டங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு!

இன்றைய முக்கிய செய்திகள் ஆகஸ்ட் 3 - நேரலை!

மேக்மைட்ரிப் முதல் காலாண்டு லாபம் 8.6% அதிகரிப்பு!
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |


