மோர் முறுக்கு 

அரிசி மாவை ஓர் அகலமான பாத்திரத்தில் போட்டு, புளித்த மோரை சூடு செய்து அரிசி மாவுடன் சேர்த்து பிசைய வேண்டும்.
மோர் முறுக்கு 
Updated on
1 min read

தேவையானவை:

புளித்த மோர்-100 கிராம்
அரிசி மாவு- 400 கிராம்
பொட்டுக் கடலைமாவு- 100 கிராம்
கடுகு- 2 தேக்கரண்டி
மிளகாய்த் தூள்- 4 தேக்கரண்டி
உப்பு, எண்ணெய்- தேவையானது

செய்முறை: 

அரிசி மாவை ஓர் அகலமான பாத்திரத்தில் போட்டு, புளித்த மோரை சூடு செய்து அரிசி மாவுடன் சேர்த்து பிசைய வேண்டும். கடுகு தாளித்து மாவுடன் சேர்த்து, உப்பு, மிளகாய்த் தூள், பொட்டுக் கடலை மாவு, சூடான எண்ணெய் ஒரு கரண்டிவிட்டு மாவை நன்றாகப் பிசைய வேண்டும். 

வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்தவுடன் மாவை முறுக்கு அச்சில் சிறுசிறு உருண்டைகளாக உருட்டிப் போட்டு முறுக்காக வட்டமாகப் பிழிந்து, பொன்னிறமாக வெந்து எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com