டர்னிப்பின் பயன்கள்!

டர்னிப்  கிழங்கு  வகையைச் சேர்ந்தது.  வெள்ளை நிறத்தில்  ஊதா கலந்து, பார்க்க அழகாக இருக்கும்.
டர்னிப்பின் பயன்கள்!
Published on
Updated on
1 min read


டர்னிப்  கிழங்கு  வகையைச் சேர்ந்தது.  வெள்ளை நிறத்தில்  ஊதா கலந்து, பார்க்க அழகாக இருக்கும்.

டர்னிப்பில் புரதம்,  கொழுப்பு,  நார்சத்து, கால்சியம்,  பாஸ்பரஸ்,  இரும்புசத்து, பொட்டாசியம், வைட்டமின்கள் ஏ,பி,சி,கே மற்றும்  பன்னிரெண்டு  வகையான அமினோ  அமிலங்கள்  உள்ள சத்தான கிழங்கு. இதன் முக்கியமான  மருத்துவக் குணங்களை தெரிந்து  கொள்வோம்:

டர்னிப்  சாறுடன்  தேன் கலந்து  குடித்தால்  இரைப்பை  புண் குணமாகும்.

சிறுநீர் எளிதில்  பிரியாது  அவதிப்படுவோர்கள்,  டர்னிப்பை  துவரம் பருப்புடன் கூட்டு செய்து  சாதத்துடன்  சாப்பிட்டு வர, சிறு நீர் தாராளமாக பிரியும்.

வைட்டமின் கே குறைபாட்டினால்  வெட்டுக் காயங்கள் ஏற்படும்போது,  ரத்தம்
இயல்பாக  உறையாது,  ரத்த இழப்பு ஏற்படுவோருக்கு  டர்னிப்  நல்ல மருந்து. டர்னிப்பில்  வைட்டமின்
கே கணிசமாக  உள்ளதால்  இதை உணவில்  சேர்த்து வர,  வைட்டமின் கே குறைபாடு  நீங்கிவிடும்.

பசியின்மையைப் போக்கி,  பசியைத் தூண்டுகிறது. இதை ஏதாவது  ஒரு வகையில்   சாப்பிட்டு வந்தால் நல்ல பசி உண்டாகும்.  சீரண சக்தியையும்  அதிகரிக்கும்.

டர்னிப்பில்  ஆன்டி  ஆக்ஸிடன்ட் உள்ளதால்,  உடலில்  நோய் எதிர்ப்பு சக்தியை  மேம்படுத்தும்.  

டர்னிப்புடன சீரகம், மிளகு சேர்த்து  சூப் தயாரித்து  குடிக்கலாம்.

இதில் டிரிப்டோஃபென் அமினோ அமிலம்  கனிசமாக  இருப்பதால்  மனஇறுக்கத்தைப்  போக்கும்  தன்மையுடையது.

டர்னிப்பை  பகல் உணவில் சேர்த்துக் கொள்வதால்  நரம்புகள்  வலுப்பெறும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com