ஜூன் 1ம் தேதி முதல் திருத்தப்பட்ட அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயங்கும்குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்: குறைகள் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார் குதிரை பேரம்: தலைமைச் செயலகம் தவெக அலுவலகமாக மாறிவிட்டது! அக்ரி கிருஷ்ணமூர்த்திஅஜித்குமாரைத் தேற்ற என்னிடம் வார்த்தைகள் இல்லை! மு.க. ஸ்டாலின்
/

அல்சர் குணமாக சாப்பிட வேண்டிய பழங்கள்!

நமது உணவுக்குழாயின் உணவு பாதையில் உண்டாகும் புண்களை அல்சர் என்று சொல்கிறோம். சிறுகுடலின் முன்பகுதியில் உட்சுவரில் உருவாகும் புண்களும் அல்சர் தான்.

News image
Updated On :11 ஜனவரி 2022, 1:45 pm IST

நமது உணவுக்குழாயின் உணவு பாதையில் உண்டாகும் புண்களை அல்சர் என்று சொல்கிறோம். சிறுகுடலின் முன்பகுதியில் உட்சுவரில் உருவாகும் புண்களும் அல்சர் தான்.

அல்சர் ஏற்பட்டால், வயிற்றில் வீக்கம் அல்லது வயிறு நிரம்பியது போன்ற உணர்வு, நெஞ்சு எரிச்சல், குமட்டல், நெஞ்சு வலி, எடை குறைதல் உள்பட பல அறிகுறிகள் ஏற்படுகின்றன.

உடலில் வெளியே தெரியக்கூடிய புண்களை விட உள்ளே பொதுவாக வயிற்றின் உட்பகுதியில் குடலில் வரக்கூடிய புண்கள் பெப்டிக் அல்சர் என்று அழைக்கப்படுகின்றன. இந்தப் புண்களை கவனிக்காவிட்டால் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்திவிடும்.  

இதனை கட்டுப்படுத்த ஒரு சில பழங்கள் உதவுகின்றது. தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்: 

ஸ்ட்ராபெர்ரியில் அதிகளவிலான ஆன்டி-ஆக்ஸிடன்ட்  உள்ளது. இது, உடலை அல்சரில் இருந்து பாதுகாக்கிறது. இது தவிர, வயிற்றுச் சுவர்களை வலுப்படுத்த உதவுகிறது. எனவே அல்சர் குணமாக தினமும் ஒரு கப் ஸ்ட்ராபெர்ரியை மதிய வேளையில் சாப்பிடுங்கள்.

Story image

ஆப்பிள் சாப்பிட்டால் அல்சர் வருவதற்கான வாய்ப்புகள் குறையும். மேலும் ஆப்பிளில்  எச்.பைலோரியின் வளர்ச்சியைத் தடுக்கும் ஃபிளாவோனாய்டுகள் உள்ளன. ஆகவே அல்சர் இருக்கும் போது ஆப்பிள் சாப்பிட்டால், விரைவில் அல்சர் குணமாகும்.

ப்ளூபெர்ரியை காலையில் எழுந்ததும் சாப்பிடுவது வயிற்றுப் புண்ணைக் கட்டுப்படுத்த உதவும். இவற்றை உண்ணும் போது நோயெதிர்ப்பு மண்டலம் வலுவாகும் மற்றும் அல்சரில் இருந்து விரைவில் குணமாக உதவும்.

மாதுளை ஜூûஸ குடிப்பது வயிற்றுப் புண்கள் மற்றும் குடல் எரிச்சலைக் குணப்படுத்தும். அதுவும் ஒவ்வொரு வேளை உணவு உண்ட ஒரு மணிநேரம் கழித்து சிறிது மாதுளையை அதன் மஞ்சள் தோலுடன் சாப்பிட்டால், வயிற்றுப் புண்கள் விரைவில் குணமாகுமாம்.

முலாம் பழத்தில் உள்ள நீர்ச்சத்து மற்றும் குளிர்விக்கும் தன்மை குடல் பிரச்னைகளை சரிசெய்வதுடன், அல்சரையும் குணப்படுத்த உதவுகிறது.

பலாப்பழத்தில் அல்சரேட்டிவ் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் உள்ளன. இவை அல்சரைக் குணப்படுத்தவும், வயிறு தொடர்பான பிரச்னைகளை சரிசெய்யவும் உதவுகின்றது.

சீதாப்பழத்தில் உள்ள வைட்டமின் ஏ, புண்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கக்கூடியவை. எனவே அல்சர் உள்ளவர்கள் சீத்தாப்பழத்தை தினமும் ஒன்று சாப்பிட்டால், விரைவில் வயிற்றுப் புண்களில் இருந்து விடுபடலாம். 

நெல்லிக்காய் ஹைப்பர் அசிடிட்டி, அல்சர் மற்றும் பிற ரத்தம் தொடர்பான கோளாறுகளை குணப்படுத்துகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.