தினைப் பொங்கல்

வாணலியில் பருப்பை வறுத்து, அரிசி பருப்பு இரண்டையும் தேவையான தண்ணீர்விட்டு குக்கரிலிட்டு வேக வைக்க வேண்டும்.
தினைப் பொங்கல்
Updated on
1 min read

தேவையானவை:

தினை அரிசி - 200 கிராம்
பாசிப் பருப்பு - 250 கிராம்
வெல்லம் - 300 கிராம்
நெய் - 50 கிராம்
முந்திரிப்பருப்பு - 6
திராட்சை - 6
ஏலப்பொடி - 1 தேக்கரண்டி
சுக்குத்தூள் - 1சிட்டிகை


செய்முறை:

வாணலியில் பருப்பை வறுத்து, அரிசி பருப்பு இரண்டையும் தேவையான தண்ணீர்விட்டு குக்கரிலிட்டு வேக வைக்க வேண்டும். வெல்லத்தை கரைத்து வடிகட்டி வெந்த பொங்கலில் விட்டு நன்கு கிளறவும். பின்னர், நெய்விட்டு கிளற வேண்டும். நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை, ஏலப்பொடி, சுக்குத்தூள் சேர்த்து பொங்கலில் விட்டு நன்றாக கிளற வேண்டும். தினைப்பொங்கல் தயார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com