பேரீச்சம் பழப் பொங்கல்

பேரீச்சம் பழத்தைப்  பொடியாக  நறுக்க  வேண்டும்.  அரிசி,  பருப்பை ஒன்றாகக் களைந்து  வைக்க வேண்டும்.
பேரீச்சம் பழப் பொங்கல்
Updated on
1 min read

தேவையானவை:

பச்சரிசி - 250 கிராம்
பாசிப்பருப்பு  - 100 கிராம் 
வெல்லம் - 300 கிராம்
தேன் - 25  கிராம்
பேரீச்சம்பழம் - 10
சுக்குத்தூள் - 1 தேக்கரண்டி
நெய்  - 50 கிராம்
ஏலக்காய்த்தூள்  -  1 தேக்கரண்டி
பால்  - 100 மில்லி

செய்முறை:   

பேரீச்சம் பழத்தைப்  பொடியாக  நறுக்க  வேண்டும்.  அரிசி,  பருப்பை ஒன்றாகக் களைந்து  வைக்க வேண்டும்.  ஒரு பாத்திரத்தில்  தேவையான தண்ணீர்விட்டு அடுப்பில்  வைத்து கொதித்ததும்  அரிசி,  பருப்பைச் சேர்த்து  வேக வைக்க வேண்டும்.  பாதி வெந்ததும் பால் சேர்த்து  இன்னும்  குழையவிட  வேண்டும். வெல்லத்தை  கொஞ்சம்  தண்ணீர் சேர்த்து  கரையவிட்டு  கொதித்ததும் வடிகட்டி வெந்த பொங்கலில்  சேர்க்க வேண்டும்.  அத்துடன் தேன்,  பொடியாக  நறுக்கிய பேரீச்சம்பழம் சேர்த்து  நன்றாக  கிளறி  சேர்ந்தாற் போல் வந்ததும்  நெய், ஏலக்காய்த்தூள், சுக்குத்தூள் சேர்த்து கிளறி இறக்க  வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com