பாமக பேரவைக் குழு தலைவராக செளமியா அன்புமணி தேர்வு!கோயில்கள், பள்ளி, கல்லூரிகள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவிட உள்ளதாக தகவல்தமிழகத்தில் மே 17 வரை மிதமான மழை! வானிலை ஆய்வு மையம்அதிமுகவில் பிளவு! சி. வி. சண்முகம் ஆதரவு எம்எல்ஏக்களுடன் பேரவை தற்காலிக தலைவரிடம் கடிதம்வைகோ, அன்புமணி ராமதாஸ், சீமானைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் முதல்வர் விஜய்பாமக தலைவர்களை பெருமைப்படுத்துவேன்: செளமியா அன்புமணிபெரியார், அண்ணா கொள்கைகள் விஜய் மூலம் கொண்டுசெல்லப்படும்: துரை வைகோதமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக!
/

பனங்கிழங்கு புட்டு 

பனங்கிழங்கு மேல் தோல் உரித்து நன்கு கழுவி சுத்தம் செய்யவும். பின்பு குக்கரில் இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி, பனங்கிழங்கு சேர்த்து வேக விடவும்.

News image
Updated On :26 ஜனவரி 2022, 6:00 am IST

தேவையானவை:

பனங்கிழங்கு -   4
தேங்காய்த் துருவல் -   2 தேக்கரண்டி
வெல்ல பொடி -  50 கிராம்
ஏலக்காய், சுக்கு பொடி - சிறிது
நெய் - சிறிது

செய்முறை: 

பனங்கிழங்கு மேல் தோல் உரித்து நன்கு கழுவி சுத்தம் செய்யவும். பின்பு குக்கரில் இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி, பனங்கிழங்கு சேர்த்து வேக விடவும். குக்கர் ஐந்து சத்தம் வந்த பின் இறக்கி இருபது நிமிடம் ஆற விடவும். பின் கிழங்கை வெளியே எடுத்து சிறு துண்டுகளாக நறுக்கி நார் நீக்கி தனியே வைக்கவும். நறுக்கிய துண்டுகளை நன்கு காயவிடவும். இரண்டு நாள் காய்ந்த பின் இதனை மிக்ஸியில்  இட்டு கொரகரப்பாக அரைக்கவும். இந்த பொடியுடன் ,வெல்ல பொடி, ஏலக்காய், சுக்கு  பொடி நெய் சேர்த்து கிளறினால் பனங்கிழங்கு புட்டு ரெடி.  இது ஒரு புதுமையான இனிப்பு அனைவரும் விரும்பி உண்பர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.