சுண்டைக்காய் பச்சடி

சுண்டைக்காயை கழுவி காம்பை நீக்கி பொடியாக நறுக்க வேண்டும். துவரம் பருப்பை முக்கால் பதமாக வேகவைத்து, வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை நறுக்க வேண்டும்.
சுண்டைக்காய் பச்சடி
Updated on
1 min read

தேவையானவை:

சுண்டைக்காய்- 100 கிராம்
துவரம் பருப்பு- 50 கிராம்
வெங்காயம்-1
தக்காளி-2
பச்சை மிளகாய்-4
சாம்பார் பொடி- 1 தேக்கரண்டி
புளி- 1 சிறு உருண்டை
கடுகு, உளுத்தம் பருப்பு- 1 தேக்கரண்டி
உப்பு, எண்ணெய்- தேவையான அளவு

செய்முறை:  

சுண்டைக்காயை கழுவி காம்பை நீக்கி பொடியாக நறுக்க வேண்டும். துவரம் பருப்பை முக்கால் பதமாக வேகவைத்து, வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை நறுக்க வேண்டும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு உளுத்தம் பருப்பைப் போட்டு பொரிந்ததும் பச்சை மிளகாய், வெங்காயம் போட்டு வதங்கியதும் சுண்டைக்காய் தக்காளி போட்டு வதக்கி, வேகவைத்த பருப்பு, சாம்பார் பொடி, உப்பு சேர்க்க வேண்டும். புளியைக் கரைத்துவிட்டு, வெந்து கெட்டியானதும் இறக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com