15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

தினை வெஜிடபிள் குழிப்பணியாரம் 

தினை அரிசி, வெந்தயம், உளுத்தம் பருப்பு மூன்றையும் இரண்டு மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து, நீரை வடித்து நைஸாக அரைத்து,  உப்பு சேர்த்து கலக்க வேண்டும்.

News image
Updated On :12 ஜூன் 2022, 1:55 pm

தேவையானவை: 

வெந்தயம்- 1 தேக்கரண்டி  
உளுத்தம் பருப்பு- 4 தேக்கரண்டி
திணை அரிசி- 100 கிராம்
காரட்-10
வெங்காயம்- 5
பச்சை மிளகாய்-2
கடுகு- 1 தேக்கரண்டி
நெய்- 50 கிராம்
இஞ்சி பேஸ்ட்- 1 தேக்கரண்டி
உப்பு- தேவையானது

செய்முறை: 

தினை அரிசி, வெந்தயம், உளுத்தம் பருப்பு மூன்றையும் இரண்டு மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து, நீரை வடித்து நைஸாக அரைத்து,  உப்பு சேர்த்து கலக்க வேண்டும்.  காரட் துருவல், பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி பேஸ்ட் சேர்த்து கடுகு தாளித்து வதக்கி மாவில் கலக்க வேண்டும். குழிப் பணியாரச் சட்டியில் எல்லா குழியிலும் நெய் தடவி மாவை ஊற்றி திருப்பிப் போட்டு பொன்னிறமாக வேக வைத்து எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.