முந்திரி ரசகுல்லா 

ந்திரிப் பருப்பை வெந்நீரில் அரை மணி நேரம் ஊற வைத்து பின்பு நைசாக அரைத்து வாணலியை அடுப்பில் வைத்து, அதில் போட்டுக் கிளரி எடுத்துவுடன் மைதாவைப் போட்டு நன்றாகப் பிசைந்து வைத்துக் கொள்ள வேண்டும். 
முந்திரி ரசகுல்லா 
Updated on
1 min read

தேவையானவை:

முந்திரிப் பருப்பு- 100 கிராம்
சர்க்கரை- 200 கிராம்
மைதா மாவுஜ 25 கிராம்
நெய்- தேவையானது
ரோஸ் எஸன்ஸ்- சில துளிகள்

செய்முறை: 

முந்திரிப் பருப்பை வெந்நீரில் அரை மணி நேரம் ஊற வைத்து பின்பு நைசாக அரைத்து வாணலியை அடுப்பில் வைத்து, அதில் போட்டுக் கிளரி எடுத்துவுடன் மைதாவைப் போட்டு நன்றாகப் பிசைந்து வைத்துக் கொள்ள வேண்டும். 

ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து தேவையான அளவு தண்ணீர் விட்டு காய்ந்ததும் சர்க்கரையைப் போட்டு லேசான கம்பிப் பதம் வரை வைத்து இறக்கி வைத்துக் கொள்ள வேண்டும். அதில் ரோஸ்  எஸன்ஸை விட வேண்டும். அடுப்பில் வாணலியில் நெய்விட்டு காய்ந்ததும் அரைத்து வைத்துள்ள முந்திரி உருண்டைகளைப் போட்டு, லேசான தீயில் பொன்னிறமாகப் பொரித்து இறக்கிவைத்து உள்ள சர்க்கரைப் பாகில் போட வேண்டும். ஊறியதும் பரிமாற வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com