நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சுழியம்

முதலில் பச்சரிசி, உளுத்தம் பருப்பை தண்ணீரில் 2 மணி நேரம் ஊற வைத்து, மிக்ஸர் ஜாரில் போட்டு, சிறிது சிறிதாக நீர் சேர்த்து, கெட்டியான பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.

News image
Updated On :23 அக்டோபர் 2022, 12:30 am

சன்ஷி சம்ரு

தேவையான பொருள்கள்:

கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு - தலா 1/2 கிண்ணம்
வெல்லம் - அரை கிண்ணம்
துருவிய தேங்காய் -மூன்றரை கிண்ணம்
ஏலக்காய் பொடி - 1 சிட்டிகை
பச்சரிசி - அரை கிண்ணம்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் பச்சரிசி, உளுத்தம் பருப்பை தண்ணீரில் 2 மணி நேரம் ஊற வைத்து, மிக்ஸர் ஜாரில் போட்டு, சிறிது சிறிதாக நீர் சேர்த்து, கெட்டியான பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும். மாவானது கெட்டியாக இருக்க வேண்டும். எனவே அரைக்கும்போது அதிகமாக நீர் சேர்த்து விடாதீர்கள்.

பின்னர், அரைத்த மாவை ஒரு பெளலில் போட்டு, அதில் சிறிது உப்பு சேர்த்து சிறிது நீர் சேர்த்து, கலந்து கொள்ள வேண்டும். மாவின் பதமானது மிகவும் கெட்டியாகவும் இருக்கக் கூடாது, மிகவும் நீர் போன்றும் இருக்கக்கூடாது. அதற்கேற்ப மாவை தயார் செய்து கொள்ளுங்கள். பின்பு ஒரு வாணலியில் வெல்லம், நீர் சேர்த்து அடுப்பில் வைத்து, வெல்லத்தை உருக வைக்க வேண்டும். வெல்லம் நன்கு கரைந்த பின்னர், அடுப்பில் இருந்து இறக்கி விட வேண்டும். பிறகு குக்கரில் கடலைப் பருப்பைப் போட்டு, நீரை ஊற்றி அடுப்பில் வைத்து குக்கரை மூடி, மிதமான தீயில் 6 விசில் விட்டு இறக்கிக் கொள்ளவும்.

பின்னர், ஒரு வாணலியில் நெய் ஊற்றி சூடானதும், துருவிய தேங்காய் சேர்த்து 2 நிமிடம் வதக்கி, பின்னர் வேக வைத்துள்ள கடலைப் பருப்பையும் சேர்த்து நன்கு வதக்கி, பின் மத்து கொண்டு மசித்துக் கொள்ள வேண்டும். பின்னர், அதில் வெல்லப் பாகுவை வடிகட்டி ஊற்றி, கெட்டியாகும் வரை கிளறி விட வேண்டும். நன்கு கெட்டியானதும், அதில் ஏலக்காய் பொடி சேர்த்து கிளறி இறக்க வேண்டும். * கலவையானது ஓரளவு வெதுவெதுப்பான சூட்டில் இருக்கும் போது, அதை சிறு உருண்டைகளாக உருட்டி தனியாக வைத்துக் கொள்ளவும்.

இறுதியில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், உருட்டி வைத்துள்ள கடலை பருப்பு உருண்டையை மாவில் பிரட்டி, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். மைதா மாவு கலவையிலும் பிரட்டி எடுக்கலாம். இப்படி அனைத்து உருண்டைகளையும் பொரித்து எடுத்தால், சுவையான செட்டிநாடு சுழியம் தயார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.