

ரத்த மூலம் குணமாக வாழைப்பூ சாறுடன் சீரகத்தைச் சேர்த்து, அரைத்து தினசரி காலையில் பருக வேண்டும்.
மூட்டு வலி உள்ளவர்கள் தேன் அருந்த, வலி குணமாகும்.
நான்கு பாதாம் பருப்புகளை ஊற வைத்து, காலையில் நன்றாக அரைத்து பாலில் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்தால் சுறுசுறுப்பாகவும் இருக்கலாம்.
பூண்டை சாப்பிட்டால் வாய்வுத் தொல்லை, வயிற்று உப்புசம் குறையும்.
தொண்டை கட்டிக் கொண்டால் கற்பூரவல்லி சாறு அருந்தினால் குணமாகும்.
பித்த அதிகரிப்பால், தலைசுற்றால் இருந்தால் தனியாவை கஷாயம் வைத்து பனை வெல்லம் சேர்த்து சாப்பிட்டால் விரைவில் குணமாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.