கடாய் காளான்
காளானை வாணலியில் கொதிநீர் விட்டுப் பத்து நிமிடங்கள் மூடி வைக்கவும். காளானை நான்காக நறுக்கி வைத்துக் கொள்ளவும். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.


தேவையானபொருள்கள்:
காளான் - 250 கிராம்
வெங்காயம் - 100 கிராம்
தக்காளி - 100 கிராம்
எண்ணெய் - 2 மேசைக் கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - ஒரு மேசைக் கரண்டி
கறித்தூள் - ஒரு மேசைக் கரண்டி
கரம் மசாலா தூள் - அரைத் தேக்கரண்டி
கறிவேப்பிலை - 2 நெட்டு
உப்பு - 2 தேக்கரண்டி
செய்முறை:
காளானை வாணலியில் கொதிநீர் விட்டுப் பத்து நிமிடங்கள் மூடி வைக்கவும். காளானை நான்காக நறுக்கி வைத்துக் கொள்ளவும். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், கறிவேப்பிலையைப் போட்டு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் மற்ற அனைத்துப் பொருள்களையும் போட்டு வதக்கவும். அதில் 25 மி.லி. தண்ணீர் சேர்த்து நன்கு பிரட்டிவிட்டு மூடி வைத்து வேக விடவும். எல்லாம் சேர்த்து நன்றாக வெந்ததும் திறந்து ஒருமுறை கிளறிவிட்டு இறக்கி வைக்கவும். சுவையான கடாய் காளான் கறி ரெடி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...