காளான் குழம்பு
முதலில் ஒரு வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் தனியா, சீரகம், பட்டை, கிராம்பு, சோம்பு, ஏலக்காய் போட்டு பொரிந்ததும் வெங்காயம், காய்ந்த


தேவையான பொருள்கள் :
காளான் - 300 கிராம்
வெங்காயம் - 2
தக்காளி - 2
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
தனியா-1 தேக்கரண்டி
சீரகம் - 3/4 தேக்கரண்டி
சோம்பு - 1/2 தேக்கரண்டி
பட்டை- 2 இஞ்ச் துண்டு
கிராம்பு, ஏலக்காய் - தலா 2
காய்ந்த மிளகாய் - 5
தேங்காய் - கால்மூடி
எண்ணெய், உப்பு, கறிவேப்பிலை, கொத்துமல்லி இலை- தேவையான அளவு
செய்முறை :
முதலில் ஒரு வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் தனியா, சீரகம், பட்டை, கிராம்பு, சோம்பு, ஏலக்காய் போட்டு பொரிந்ததும் வெங்காயம், காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கவும். அடுத்து அதில் தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி நன்றாக மசிந்ததும் தேங்காய்த் துருவல் சேர்த்து வதக்கி ஆற வைக்கவும். அனைத்தும் நன்றாக ஆறியதும், அதை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும். இப்போது காளானை நன்கு கழுவி, நீரில்லாமல் துடைத்து சற்றே பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் கடுகு போட்டு தாளித்தவுடன் வெங்காயம், கறிவேப்பிலையைச் சேர்த்து வதக்கவும். அடுத்துஅதில்அரைத்த மசாலா, மஞ்சள் தூள், உப்பு, தேவையான அளவு, தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். குழம்பு நன்றாகக் கொதி வந்ததும், காளான்துண்டுகளைச் சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைக்கவும். குழம்பு திக்கானபதம் வந்து எண்ணெய் பிரிய ஆரம்பித்தவுடன் கொத்துமல்லி இலை தூவி அடுப்பிலிருந்து இறக்கவும். சூப்பரான காளான் குழம்பு ரெடி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...