எரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

காளான் புலாவ்

அரிசியைக் கழுவி 30 நிமிடங்கள் ஊற வைக்கவும். காளானை இரண்டாக நறுக்கவும். தக்காளி,  பச்சை மிளகாய்,  கொத்தமல்லி இலை ஆகியன சேர்த்து அரைக்கவும்.

News image
Updated On :11 பிப்ரவரி 2023, 5:21 pm

கவிதா சரவணன்

தேவையான பொருள்:

பாசுமதி அரிசி - ஒரு கிண்ணம்
மொட்டுக்காளான் - அரை கிண்ணம்
இஞ்சி, பூண்டு விழுது-கால் தேக்கரண்டி
நீளமாக நறுக்கிய வெங்காயம் - கால் கிண்ணம்
தக்காளி - 3
பச்சை மிளகாய் - 2
கொத்தமல்லிஇலை - சிறிதளவு
ஊற வைத்த பட்டாணி - கால் கிண்ணம்
பட்டை - சிறிய துண்டு
கிராம்பு - 2
பிரிஞ்சி இலை - ஒன்று
மிளகாய் தூள் - அரைதேக்கரண்டி
கரம் மசாலாத் தூள் - கால்தேக்கரண்டி
நெய் - 2  தேக்கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை: 

அரிசியைக் கழுவி 30 நிமிடங்கள் ஊற வைக்கவும். காளானை இரண்டாக நறுக்கவும். தக்காளி,  பச்சை மிளகாய்,  கொத்தமல்லி இலை ஆகியன சேர்த்து அரைக்கவும். குக்கரில் எண்ணெய்விட்டு சூடானதும் பிரிஞ்சி இலை,  பட்டை, கிராம்பு போட்டு பொரிந்ததும் வெங்காயம்,  இஞ்சி பூண்டு விழுது போட்டு வதக்கவும்.

பின்னர், அரைத்த விழுது, மிளகாய் தூள், கரம் மசாலாத் தூள் போட்டு வதக்கவும். அவை நன்கு வதங்கியதும் அரிசி, காளான், பட்டாணி, உப்பு,  ஒன்றரை கிண்ணம் தண்ணீர்விட்டு 3 விசில் வரும் வரை வேக விடவும். பின்னர் நெய் சேர்த்து கிளறி பரிமாறவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.