சமையல் குறிப்புகள்..

1922-ஆம் ஆண்டு டிச. 4-இல் பிறந்த பின்னணிப் பாடகர் கண்டசாலாவுக்கு நூற்றாண்டு விழா ஆண்டு இது. மண்ணைவிட்டு மறைந்தாலும்,  வித்தியாசமான குரலால் இன்றும் திரை ரசிகர்ளின் செவிகளில் அவர் ஒலித்துவருகிறார்.
சமையல் குறிப்புகள்..


பாயசத்துக்கு திராட்சைக்கு பதிலாகப் பேரிச்சம் பழத்தைப் பொடியாக நறுக்கி வைத்து நெய்யில் பொரித்து போட்டால் சுவையாக இருக்கும்.

தோசை மாவு,  பொங்கல், போன்றவற்றில் சீரகத்தைக் கைகளால் சிறிது தேய்த்துப் போட்டால், சுவையுடன் மணமாக இருக்கும்.

பாகற்காயுடன் உப்பு,  மஞ்சள் தூள்,  வெல்லம், எலுமிச்சை சாறு ஆகியன சேர்த்து, அரை மணி நேரம் வைத்திருந்தால், கசப்பு காணாமல் போய்விடும்..

இட்லி பொடி தயாரிக்கும்போது ஒரு தேக்கரண்டி மல்லியை வறுத்து மற்ற சாமான்களுடன் பொடி செய்தால் இட்லி பொடி வாசனையாக இருக்கும்.

உருளைக்கிழங்கு வேக வைக்கும்போது, அவை வெந்ததும் வெடிக்காமல் இருக்க சிறிது உப்பையும் சேர்த்து வேக வைக்க வேண்டும். இதனால் உருளைக்கிழங்கு வெடிக்காமல் நல்ல பதத்துடன்இருக்கும்..

தக்காளி குருமா செய்யும்போது சிறிது வெங்காயத்தைப் பச்சையாக அறைத்து ஊற்றவும்.  குருமா வாசனையுடன் சுவையாகவும் இருக்கும்.

துவரம் பருப்புக்குப் பதிலாகப் பொட்டுக் கடலையுடன், வர மிளகாய், பூண்டு, கொப்பரை தேங்காய் ஆகியன சேர்த்து பருப்புப் பொடி செய்தால், பொடி மிகவும் ருசியாகவும் வாசனையாகவும் இருக்கும்.

இட்லிக்கு அரைத்த மாவில் இரண்டு தேக்கரண்டி நல்லெண்ணெய்விட்டு கலந்துவைத்தால், இட்லி மிருதுவாக இருக்கும்.

உளுந்து வடை செய்யும்போது ஒரு கைப்பிடி கொத்தமல்லித் தழையை சேர்த்து ஆட்டி செய்தால்,  நறுக்கிப் போட்டு செய்வதைவிட வாசனையாக இருக்கும்.

ரவா தோசை செய்யும்போது 2 தேக்கரண்டி கடலை மாவு சேர்த்து செய்தால் தோசை நன்கு சிவந்து மொறுமொறுவென சுவையாக இருக்கும்..

முதல் நாள் வாங்கிய கீரையை மறுநாள் பயன்படுத்தும்போது, கீரையின் வேர் பகுதி தண்ணீரில் இருக்குமாறு வைத்திருந்தால், கீரை மறுநாள் வரை வாடாமல் இருக்கும்.

தயிர் பச்சடி நீர்த்துப் போய்விட்டால், அதனுடன் சிறிது நிலக்கடலையை வறுத்து பொடியாக அரைத்து சேர்த்தால் பச்சடி கெட்டியாகிவிடும்.

குழம்பில் உப்பு அதிகமாகிவிட்டால், தக்காளிப் பழத்தையோ அல்லது உருளைக் கிழங்கையோ வெட்டிப் போட்டு கொதிக்க வைத்தால் உப்பு குறைந்துவிடும்.

சாம்பார் செய்யும்போது, அதனுடன் ஒரு நெல்லிக்காயைச் சேர்த்துச் செய்தால், சாம்பாரின் சுவையும் மணமும் அபாரமாக இருக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com