

தேவையான பொருள்கள்:
கோதுமை மாவு- 2 கிண்ணம்
பச்சை மிளகாய்-4
உப்பு- தேவையான அளவு
நெய்- 4 மேசைக் கரண்டி
இஞ்சி- சிறு துண்டு
கொத்துமல்லி- சிறிதளவு
செய்முறை:
மாவுடன் உப்பு, துருவின இஞ்சி சேர்க்கவும். பச்சைமிளகாய், கொத்துமல்லியை அரைத்து சேர்க்கவும். பிசையவும். மொத்த மாவை ஒரே அப்பளமாகத் திரட்டவும். அடுப்பை மெலிதாக எரிய விட்டு வாணலியை சூடாக்கவும். இட்ட அப்பளத்தைப் போடவும். விரலால் சிறிய பள்ளங்கள் செய்யவும். நெய் சேர்த்து, மூடி வைக்கவும். மாவு வெந்ததும் சைட் டிஷ் வைத்து சாப்பிடலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.