மிர்சி ரொட்டி (ராஜஸ்தான்)

பாசிப் பருப்பை ஊற வைக்கவும். கோதுமை மாவுடன் உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயத் தூள், நெய் சேர்க்கவும், பச்சை மிளகாயை பொடியாக அரிந்து சேர்க்கவும்.
மிர்சி ரொட்டி (ராஜஸ்தான்)

தேவையான பொருள்கள்:

கோதுமை மாவு- 2 கிண்ணம்
பாசிப் பருப்பு- கால் கிண்ணம்
பச்சை மிளகாய்- 2 கிண்ணம்
மஞ்சள் தூள், பெருங்காயத் தூள்- 
தலா 1/4 மேசைக் கரண்டி
உப்பு- தேவையான அளவு
நெய்- 10 மேசைக் கரண்டி

செய்முறை:

பாசிப் பருப்பை ஊற வைக்கவும். கோதுமை மாவுடன் உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயத் தூள், நெய் சேர்க்கவும், பச்சை மிளகாயை பொடியாக அரிந்து சேர்க்கவும். 2 தேக்கரண்டி நெய் , ஊற வைத்த பாசிப் பருப்பு,  தேவையான தண்ணீர் சேர்த்து பிசையவும்.

அப்பளங்களாகத் திரட்டி, சூடான வாணலியில் போட்டு சுற்றிலும் நெய் சேர்த்து, இருபுறமும் திருப்பி சுட்டெடுக்கவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com