கோதுமை ரவை இனிப்புப் பொங்கல்

வாணலியை அடுப்பில் வைத்து அதில் நெய் ஊற்றி காய்ந்ததும் கோதுமை ரவையைப் போட்டு வறுத்துக் கொள்ள வேண்டும். பாசிப் பருப்பை குழைய வேக வைத்துக் கொள்ள வேண்டும்.
கோதுமை ரவை இனிப்புப் பொங்கல்
Updated on
1 min read

தேவையானவை:

கோதுமை ரவை- 100 கிராம்
பாசிப் பருப்பு- 50 கிராம்
வெல்லம்- 100 கிராம்
முந்திரிப் பருப்பு- 10
ஏலக்காய்ப் பொடி- 1 தேக்கரண்டி
நெய்- தேவையான அளவு

செய்முறை: 

வாணலியை அடுப்பில் வைத்து அதில் நெய் ஊற்றி காய்ந்ததும் கோதுமை ரவையைப் போட்டு வறுத்துக் கொள்ள வேண்டும். பாசிப் பருப்பை குழைய வேக வைத்துக் கொள்ள வேண்டும். வெல்லத்தை வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும். முந்திரியை நெய்யில் வறுத்துக் கொள்ள வேண்டும். அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து, இரண்டு கிண்ணம் தண்ணீர்விட்டு கொதித்ததும் கோதுமை ரவையைச் சேர்த்து வேகவிட வேண்டும். முக்கால் பதம் வெந்ததும் அதனுடன் வேக வைத்த பாசிப்பருப்பு, வெல்லக் கரைசல் சேர்த்து நன்றாக கிளற வேண்டும்.  எல்லாம் வெந்து சேர்த்து வந்ததும் ஏலக்காய்ப் பொடி, முந்திரிப் பருப்பை சேர்க்க வேண்டும். இறுதியில் நெய்யை சேர்த்து நன்றாக தளர வந்ததும் இறக்கவும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com