வீட்டில் லட்சுமி கடாட்சம் நிறைந்திருக்க..!
அதிகாலை நாலு மணி முதல் 5 மணி வரை பிரம்ம முகூர்த்த நேரத்தில், விழித்திருக்க வேண்டும். அந்த நேரத்தில் தேவர்களும் முன்னோர்களும் வீட்டை நோக்கி வருகிறார்கள் என்பது நம்பிக்கை.


அதிகாலை நாலு மணி முதல் 5 மணி வரை பிரம்ம முகூர்த்த நேரத்தில், விழித்திருக்க வேண்டும். அந்த நேரத்தில் தேவர்களும் முன்னோர்களும் வீட்டை நோக்கி வருகிறார்கள் என்பது நம்பிக்கை. அவர்களை வழிபட்டால் நன்மை செய்வார்கள். அந்த நேரத்தில் விளக்கேற்றுவதால் வீட்டில் ஐஸ்வர்யம் பெருகும். அதிகாலையில் கோலம் போடும்போது, "மகாலட்சுமி வரவேண்டும்' என்று சொல்ல வேண்டும்.
நாள்தோறும் துளசி மாடத்துக்கு விளக்கு ஏற்றி மூன்று முறை வலம் வர வேண்டும். காலை வேலைகளில் வெங்கடேஸ்வர சுப்ரபாதமும், மாலை வேலைகளில் விஷ்ணு சஹஸ்ரநாமமும் ஒலிக்கும் வீடுகளில் செல்வம் தேடி வரும்.
பசுக்களுக்கு பழம் வாங்கி கொடுத்தாலே கோடி புண்ணியம் தேடி வரும். கோ மாதா பூஜை குபேரப் பூஜைக்கு சமம்.
சங்கு, நெல்லிக்காய், பசு, பசு சாணம், கோ ஜலம் தாமரை பூக்கள், சுத்தமான ஆடைகள் வீட்டில் இருப்பது சுபம். காலை எழுந்தவுடன் உள்ளங்கைகள் பசு, கோயில் கோபுரம், இறைவனின் திருவுரு உருவப்படங்களைப் பார்க்க வேண்டும்.
செவ்வாய், வெள்ளிக்கிழமையில் அஞ்சு முகம் கொண்ட விளக்கு ஏற்றுவது இன்னும் சிறப்பு. மாலை ஆறு மணிக்கே திருவிளக்கு ஏற்றி விட வேண்டும். இரு நாள்களிலும் மஞ்சள், வெற்றிலை, சுண்ணாம்பு, பால், தண்ணீர், மோர் போன்ற மங்களப் பொருள்களைப் பிறருக்கு கொடுக்கக் கூடாது.
வீட்டுக்கு வரும் சுமங்கலிகளுக்கு குங்குமமும் தண்ணீரும் வழங்க வேண்டும். அவர்களுக்கு மஞ்சள் கிழங்கு கொடுப்பதால் பல ஜென்மங்களில் செய்த பாவங்கள் விலகும். பாக்கியங்களும் பொருளும் சந்தோஷமும் பெருகும்.
வீட்டில் நெல்லி மரம் இருந்தால், லட்சுமி கடாட்சம் பெருகும். விஷ்ணுவின் அம்சமாக நெல்லி மரம் திகழ்வதால், நெல்லி மரத்தில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள்.
எந்த வீட்டில் பெண்கள் கெளரவமாக நடத்தப்படுகிறார்களோ, சந்தோஷமாக இருக்கிறார்களோ அங்கு திருமகள் குடியேறுவாள்.
எந்தப் பொருளையும் இல்லை என கூறக்கூடாது. இந்தப் பொருள் வாங்க வேண்டியது இருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.
அன்னம், உப்பு, நெய் ஆகியவற்றை கரண்டியால் பரிமாற வேண்டும். பெண்கள் வளையல் அணியாமல் எதையும் பரிமாறக் கூடாது.
இரவில் வீட்டை பெருக்கினால் குப்பையை வெளியே கொட்ட கூடாது. கோலமிட்ட வீட்டில் திருமகள் தங்குவாள். பிளாட்டில் வசிப்பவர்கள் தங்கள் "மெயின் டோர்' வாசலில் கோலம் வரையலாம்.
அமாவாசை அன்று எண்ணெய் தேய்த்து குளிக்கக் கூடாது. வெள்ளிக்கிழமை உப்பு வாங்கினால் நன்மை உண்டாகும்.
பணம் கொடுப்பவரும் வாங்குபவரும் வாசல் படிக்கு உள்ளே இருந்தோ அல்லது கீழே இறங்கியோ வாங்கவோ, கொடுக்கவோ வேண்டும்.
குத்துவிளக்கு ஏற்றும்போது இரு திரி விட்டு, ஒரு முகம் ஏற்ற வேண்டும்.
யானையின் நெற்றி, தாமரை, பசுவின் பின்பாகம், பதிவிரதை, வில்வம் ஆகிய ஐந்து இடங்களில் லட்சுமியின் வாசம் உள்ளது. அதேபோல் லட்சுமிக்கு உகந்த மாமரம் என்பதால், மங்கள காரியங்கள் நடக்கும்போது மாவிலை. தோரணம் கட்டப்படுகிறது.
தெற்கே பார்த்து நின்று கொண்டு கோலம் போடக் கூடாது. போடுகின்ற கோடு தெற்கு பக்கமாய் முடிய கூடாது.
எந்த வீட்டில் சாப்பாட்டுக்கு ருசியாக ஊறுகாய் இருக்கிறதோ, அந்த வீட்டில் தரித்திரம் இருக்காது .
பூஜை அறையை சுத்தமாக வைத்திருந்து, அந்தந்த கிழமைகளுக்கு ஏற்றவாறு கோலம் போட்டு ஊதுபத்தி ஏற்றி விளக்கேற்றி புஷ்பங்கள் சாற்றி வழிபட்டால் மகாலட்சுமி நிரந்தரமாக குடி இருப்பாள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...