

தேவையான அளவு:
அரிசிப் பொரி- 2 கிண்ணம்
அவல், உளுந்து- 1 கிண்ணம்
நெய்- தேவையான அளவு
இட்லி அரிசி- 2 கிண்ணம்
உப்பு- தேவையான அளவு
செய்முறை:
உளுந்தை தனியாகவும், மீதமுள்ள பொருள்களை ஒன்றாகவும் ஊற வைக்கவும். உளுந்தை வழுவழுப்பாகவும் மீதமுள்ளவைகளை நன்றாகப் போட்டு, சற்றே கரகரப்பாக அரைத்து எல்லாம் ஒன்றாகப் போட்டு, உப்பு சேர்த்து கலந்து எட்டு மணி நேரம் புளிக்க வைக்கவும்.
இட்லி பாத்திரத்தில் தேவையான தண்ணீர் ஊற்றி சூடாக்கவும், தட்டில் நெய் தடவி மாவை பரவலாக ஊற்றி, ஆவியில் 7 நிமிடங்கள் வேக வைக்கவும். வெந்ததும் எடுத்து, மேலாக நெய் சேர்த்து பரிமாறவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.