தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

ஸ்பாட் இட்லி (ஆந்திரம்)

வாணலியில் 2 தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து, பொடியாக அரித்த வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும், உப்பு, மிளகாய் தூள், தனியா தூள், மஞ்சள் தூள்,  சேர்த்து நன்கு கிளறி அடுப்பை அணைக்கவும்.

News image
Updated On :29 ஜூலை 2023, 6:30 pm

தேவையான பொருள்கள்: 

இட்லி மாவு- 2 கிண்ணம்
வெங்காயம், தக்காளி- தலா 2
உப்பு, எண்ணெய்- தேவையான அளவு
மிளகாய் தூள், தனியா தூள், கரம் மசாலாத் தூள், மஞ்சள் தூள்- தலா 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள்- கால் மேசைக்கரண்டி
இஞ்சி,  பூண்டு விழுது- 1 மேசைக்கரண்டி

செய்முறை: 

வாணலியில் 2 தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து, பொடியாக அரித்த வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும், உப்பு, மிளகாய் தூள், தனியா தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள், இஞ்சி- பூண்டு விழுது சேர்த்து நன்கு கிளறி அடுப்பை அணைக்கவும்.

வாணலியை சூடாக்கி, 1 மேசைக்கரண்டி இந்த விழுது சேர்க்கவும், மேலாக 1 கரண்டி இட்லி மாவு சுற்றிலும் எண்ணெய் சேர்த்து, மூடி வைத்து அடுப்பை சிம்மில் வைக்கவும். மாவு வெந்ததும் எடுத்து பரிமாறவும். இதற்கு தொட்டுக் கொள்ள எதுவும் தேவையில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.