இப்படியும் ஓர் எம்எல்ஏ!
சத்தீஸ்கர் மாநில பெண் எம்எல்ஏ சகானி சாகு அண்மையில் மேற்கொண்ட செயல் பெரிய பரபரப்பை ஏற்படுத்திவிட்டது.


சத்தீஸ்கர் மாநில பெண் எம்எல்ஏ சகானி சாகு அண்மையில் மேற்கொண்ட செயல் பெரிய பரபரப்பை ஏற்படுத்திவிட்டது.
அப்படி அவர் என்னதான் செய்தார்?
அவருடைய ஆதரவாளரின் டிரக் ஒன்று அதிக சரக்குகள் ஏற்றியமைக்காக, ராஜ் நந்த்காவுன் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பிடிபட்டது. "ரூ.42 ஆயிரம் அபராதம் கட்டினால்தான் வாகனத்தை ரிலீஸ் செய்வோம்' என்று கோட்டாட்சியர் அலுவலக ஊழியர்கள் கூறிவிட்டனர்.
ஆதரவாளர் உடனே எம்எல்ஏ சகானி சாகுவை செல்லிடப்பேசியில் அழைத்து, "நீங்கள் பேசுங்கள்' என்றார்.
உடனே எம்எல்ஏவும் அந்த இடத்துக்கு வந்து பேசினார். ஆனால், கோட்டாட்சியர் அலுவலக ஊழியர்கள் ஏற்க மறுத்தனர். "அபராதம் கட்டினால்தான் டிரக்கை ரிலீஸ் செய்வோம்' என்று ஆணித்தரமாய் கூறிவிட்டனர்.
உடனே எம்எல்ஏ சகானி சாகு என்ன செய்தார் தெரியுமா? தன்னுடைய கழுத்தில் இருந்த தாலியைக் கழற்றி கொடுத்து, இதனை விற்று பணத்தை எடுத்துகொள்ளுங்கள் என்று கண்டிப்புடன் கூறினார்.
இதைப் பார்த்த கோட்டாட்சியர் அலுவலக ஊழியர்கள் செய்வதறியாது திகைத்தனர். உடனே டிரக்கை ரிலீஸ் செய்து அனுப்பிவிட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...