பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

பூசணி விதை மசால் கறி 

அடுப்பில் ஒரு வாணலியை வைத்து  அதில் எண்ணெய் ஊற்றவும். அதில் 50 கிராம் பூசணிவிதைகளை சேர்த்து லேசாக நிறம் மாறும் வரை வதக்கி எடுக்கவும்.

News image
Updated On :10 ஜூன் 2023, 6:30 pm

DIN

தேவையானவை

பூசணி விதைகள்  50 கிராம்
பெரிய வெங்காயம்  3
தக்காளி  2
சீரகம்  ஒரு தேக்கரண்டி
சோம்பு  ஒரு  தேக்கரண்டி 
மஞ்சள் தூள்  கால் தேக்கரண்டி
மிளகாய்த்தூள்  2 தேக்கரண்டி
முந்திரி  10
பச்சை மிளகாய்  3
இஞ்சி  பூண்டு  ஐந்து பற்கள்
ஏலக்காய்  2
பட்டை  1
கிராம்பு  3
உப்பு  தேவையான அளவு
வெண்ணெய்  தேவையான அளவு
கரம் மசாலாத்தூள்அரை தேக்கரண்டி
நறுக்கிய மல்லி தழை  சிறிதளவு

செய்முறை :

அடுப்பில் ஒரு வாணலியை வைத்து  அதில் எண்ணெய் ஊற்றவும். அதில் 50 கிராம் பூசணிவிதைகளை சேர்த்து லேசாக நிறம் மாறும் வரை வதக்கி எடுக்கவும்.  பின்னர் வாணலியில் அதே போல பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து அதனுடன் சீரகம், சோம்பு போட்டு வதக்கவும்.  நன்றாக வறுத்த பிறகு துண்டாக்கிய  இஞ்சி, நறுக்கிய பூண்டு  சேர்த்து வதக்க வேண்டும். அதில் நறுக்கிய பச்சை மிளகாயையும் சேர்த்துவதங்கி வரும்பொழுது 10 முந்திரி பருப்புகளை சேர்த்து  நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறம் வரும் வரை வதக்கவேண்டும்.

பிறகு அதில்  வைத்துள்ள விழுதை சேர்த்து ஒரு கப் தண்ணீர் விட்டு நன்கு கொதிக்க விட்டு பூசணி  விதைகளை சேர்த்து கலக்கவும். இப்போது , நறுக்கிய கொத்தமல்லி தழை தூவி அலங்கரித்து பரிமாறலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.