கொழுப்பு அல்ல... வேர்க்கடலை!

கடந்த  20 ஆண்டுகளாக,   இந்தியாவில் நிலக் கடலையின் விலை பெரிய மாற்றம் ஏதும் இல்லாமல் ஒரே விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
கொழுப்பு அல்ல... வேர்க்கடலை!
Published on
Updated on
2 min read

கடந்த  20 ஆண்டுகளாக,   இந்தியாவில் நிலக் கடலையின் விலை பெரிய மாற்றம் ஏதும் இல்லாமல் ஒரே விலையில் விற்பனை செய்யப்படுகிறது.  இதே காலகட்டத்தில் அமெரிக்கர்களின் உணவில் நிலக்கடலையின் பங்கு 15 மடங்கு கூடி இருப்பதுடன் விலையும் கூடி இருக்கிறது. 

நிலக்கடலை குறித்த மூட நம்பிக்கைகள்,  அவநம்பிக்கைகள் நாடு முழுவதும் சர்வதேச நிறுவனங்களால் திட்டமிட்டு பரப்பிவிடப்பட்டுள்ளன.  நாட்டில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டிருக்கும் வயலில் அது கொட்டை வைக்கும் பருவம் வரை வயலில் எலிகள் அவ்வளவாக இருக்காது.  ஆனால் காய் பிடிக்கும் பருவத்துக்குப் பிறகு எலிகள் அளவு கடந்து குட்டி போட்டிருப்பதைக் காணலாம் . நிலக்கடலை செடியை சாப்பிடும் ஆடு, மாடு,  வயல் வெளியே சுற்றி உள்ள பறவைகள் எல்லாம் ஒரே நேரத்தில் குட்டி போடுவது இதற்கு நல்ல உதாரணம்.

பெண்களுக்கு நன்மை பயக்கும்: பெண்களின் இயல்பான ஹார்மோன் வளர்ச்சியை நிலக்கடலை சீராக்குகிறது. இதனால் பெண்களுக்கு விரைவில் குழந்தைப் பேறு ஏற்படுவதுடன் மார்பகக் கட்டி உண்டாவதையும் தடுக்கிறது. பெண்களுக்கு பெரிதும் தேவையான போலிக் அமிலம்,பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம், துத்தநாகம்,இரும்பு,  வைட்டமின்கள், குறுட்டாமிக் அமிலம் நிலக்கடலையில் நிறைந்துள்ளது.  கருவின் மூளை, நரம்பு வளர்ச்சி சிறப்பாக அமையும்.  கருத்தரிப்பதற்கு முன்பே உண்பது மிக,  மிக உத்தமம். 

நீரழிவு நோயைத் தடுக்கும்: நிலக்கடலையில் மாங்கனீஸ் சத்து நிறைய உள்ளது. மாங்கனீஸ் சத்துமாவுச் சத்து,  கொழுப்புகள் மாற்றத்தில் முக்கிய பங்காற்றுகிறது .  உண்ணும் உணவில் இருந்து கால்சியம் நமது உடலுக்கு கிடைக்கவும் பயன்படுகிறது. குறிப்பாக,  பெண்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்புத் துளை நோய் வராமலும் பாதுகாத்துகொள்ளலாம். 
 
பித்தப் பை கல்லைக் கரைக்கும்: நிலக்கடலையை தினமும் 30 கிராம் அளவுக்கு தினமும் சாப்பிட்டு வந்தால் பித்தப் பை கல் உருவாவதைத் தடுக்க முடியும். 

இதயம் காக்கும்: நிலக் கடலையைச் சாப்பிட்டால் எடை போடும் என்று நினைக்கிறோம். உண்மையல்ல. மாறாக உடல் எடை அதிகமாகாமல் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களும் நிலக்கடலையைச் சாப்பிடலாம். நிலக் கடலையில்" ரெஸ்வரெட்ரால்'  என்ற சத்து நிறைந்துள்ளது . இது இதய வால்வுகளைப் பாதுகாக்கிறது. இதய நோய்கள் வருவதையும் தடுக்கிறது.  இதுவே மிகச் சிறந்த ஆண்டி ஆக்சிடென்டாகத் திகழ்கிறது.

இளமையைப் பராமரிக்கும்: நிலக்கடலையில் "பாலிபீனால்ஸ்' என்ற ஆண்டி ஆக்சிடென்ட் உள்ளது.  இது நமக்கு நோய் வருவதைத் தடுப்பதுடன் இளமையை பராமரிக்கவும் பயன்படுகிறது.

ஞாபகச் சக்தியை அதிகரிக்கும்:   மூளை வளர்ச்சிக்கு பயன்படும் வைட்டமின் 3 நியாசின் உள்ளது. இது மூளைவளர்ச்சிக்கும் ஞாபக சக்திக்கும் பெரிதும் பயனளிக்கிறது. ரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது.

மன அழுத்தத்தைப் போக்கும்: நிலக்கடையில் "பரிப்டோபான்'  என்ற முக்கிய அமினோ அமிலம் நிறைந்துள்ளது. இந்த வகை அமினோ அமிலம் செரட் டோனின் என்ற மூளையை உற்சாகப்படுத்தும்.உயிர் வேதிப் பொருள் உற்பத்திக்குப் பயன்படுகிறது.செரட்டோனின் மூளை நரம்புகளை தூண்டுகிறது. மனஅழுத்தத்தைப் போக்குகிறது.

பாதாம், பிஸ்தாவைவிட சிறந்தது:  பாதாம், பிஸ்தா,முந்திரிப் பருப்புகளைவிட நிலக் கடலையில்தான் அளவுக்கு அதிகமான சத்துகள் உள்ளன. நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ஆற்றலும் நிலக்கடலைக்குதான் உண்டு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com