கீரைகளின் பயன்கள்

கீரைகளை உண்டால்,  நமது உடலில் சத்துகள் அதிகம் சேரும்.  பல நோய்களுக்குத் தீர்வு உண்டு.  எந்தெந்த கீரைகளுக்கு என்னென்ன சத்துகள்.
கீரைகளின் பயன்கள்


கீரைகளை உண்டால்,  நமது உடலில் சத்துகள் அதிகம் சேரும்.  பல நோய்களுக்குத் தீர்வு உண்டு.  எந்தெந்த கீரைகளுக்கு என்னென்ன சத்துகள்.

வேலி பருத்தித் கீரை:  வாதங்களால் ஏற்படும் வலி நீங்கும்.  வீக்கம் குறையும். யானைக்கால் நோய் குணமாகும்.

சதகுப்பை கீரை:  ஜீரணச் சக்தி சரியாகும். குழந்தை பெற்றவர்களின் கர்பப்பை அழுக்கு நீங்கும்.

நிலவேம்பு கீரை: விஷக் காய்ச்சலைப்  போக்கும்.  வயிற்றுப் புழுக்களை வெளியேற்றும்.  சொறி சிரங்குகளைக் குணமாக்கும்.

பொடுதலைக் கீரை:  தலைப் பொடுகு நீங்கும். நீரிழிவைக் கட்டுப் படுத்தும். அக்கி புண்களை குணமாக்கும்.

தும்பைக் கீரை: ஒவ்வாமை பிரச்னையும்,  ஒற்றைத் தலைவலியும் தீரும். உடல் அசதி,சோர்வை நீக்கும்.

சக்கரவர்த்திக் கீரை: மூட்டு வலி, ரத்த சோகை நீங்கும்.  எலும்பு வலுப்படும். புற்றுநோய்க்கும் சிறந்த மருந்து.

அம்மான் பச்சரிசிக் கீரை: உடலில்  உள்ள மருக்கள் நீங்கும். தாய்ப் பால் சுரக்கும்.
 குப்பை மேனி கீரை: பூச்சிகளால் ஏற்படும் விஷக்கடி குணமாகும். மார்புச் சளி வெளியேறும். முகப் பருக்களைப் போக்கும்.

சர்க்கரை வள்ளிக்கிழங்கு:  உடல் எடையைக் குறைக்கும். இதில் உள்ள பி6 சத்து மாரடைப்பைத் தடுக்கும். அல்சர் குணமாகும். ஃபோலிக்அமிலம் இருப்பதால் கர்ப்பிணிகளுக்கு நல்லது. சர்க்கரை நோய்க்கும் நல்லது. ஆன்டி ஆக்சிடண்ட்ஸ், பீடா கரோடின் உள்ளதால் புற்று நோயைத் தடுக்கும். நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com