கவுனி அரிசி மோர்க்களி
கவுனி அரிசியை 2 மணி நேரம் ஊற வைத்து, மாவாக அரைக்கவும். இஞ்சி, பச்சை மிளகாய், தேங்காய் ஆகியவற்றை ஒன்றாய் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.


தேவையானவை:
கவுனி அரிசி- 2 கிண்ணம்
புளித்த கெட்டித் தயிர்- ஒன்றரை கிண்ணம்
தேங்காய்த் துருவல்- கால் கிண்ணம்
பச்சை மிளகாய்- 3
இஞ்சி- சிறிதளவு
பெங்காயம்- அரை தேக்கரண்டி
கடுகு- 1 தேக்கரண்டி
உப்பு, எண்ணெய்- தேவையான அளவு
கறிவேப்பிலை- 2 கொத்து
செய்முறை:
கவுனி அரிசியை 2 மணி நேரம் ஊற வைத்து, மாவாக அரைக்கவும். இஞ்சி, பச்சை மிளகாய், தேங்காய் ஆகியவற்றை ஒன்றாய் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். அரைத்த மாவு, தேங்காய் விழுது, பெருங்காயம், தயிர், உப்பு சேர்த்து கலந்துவைக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு வெடித்ததும் கறிவேப்பிலையை கிள்ளிப்போட்டு மாவுக் கலவையைக் கொட்டி கிளறவும். நன்றாகக் குழைய வெந்ததும் எண்ணெய் தடவிய தட்டில் கொட்டி ஆறியதும் வில்லைகளாகப் போட்டு கொத்தமல்லி சட்னியுடன் பரிமாறவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...