நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

முருங்கைக் கீரை ரசம்

முதலில் கீரையை அரை கிண்ணம் நீர்விட்டு வேகவிட்டு எடுத்துகொள்ளவும். அரைக்கக் கொடுத்துள்ளவற்றை சிறிதளவு நீர்விட்டு கொரகொரப்பாக அரைக்கவும்.

News image
Updated On :28 அக்டோபர் 2023, 6:30 pm

கவிதா சரவணன்

தேவையானவை:

முருங்கைக் கீரை கால் கிண்ணம்
அரைத்துகொள்ள:
வெந்தயம், சீரகம் தலா அரை தேக்கரண்டி
பச்சை மிளகாய் 2
எலுமிச்சைச் சாறு ஒரு மேசைக்கரண்டி
தக்காளி 1
மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை
உப்பு 1 மேசைக்கரண்டி
தனியா 2 தேக்கரண்டி

தாளிக்க:

கடுகு 2 தேக்கரண்டி
கட்டிப் பெருங்காயம் சிறிதளவு
எண்ணெய் சிறிதளவு
காய்ந்த மிளகாய் 2

செய்முறை: 

முதலில் கீரையை அரை கிண்ணம் நீர்விட்டு வேகவிட்டு எடுத்துகொள்ளவும். அரைக்கக் கொடுத்துள்ளவற்றை சிறிதளவு நீர்விட்டு கொரகொரப்பாக அரைக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும், தாளிக்கும் பொருள்களைப் போட்டு வறுத்து, அரைத்த விழுது நறுக்கிய தக்காளி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கவும். தக்காளி வதங்கியதும் முருங்கைக் கீரையை வேக வைத்த நீருடன் சேர்த்து கொதிக்கவிடவும். பின்னர் பரிமாறவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.